அட்லாண்டாவில் ஃபெட்னா 2020 தமிழ்விழா!

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை (ஃபெட்னா) 33வது தமிழ் விழா அட்லாண்டா மாநகரில் நடைபெற உள்ளது. வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையுடன் அட்லாண்டா மாநகர தமிழ்ச்சங்கம் இணைந்து நடத்தும் இந்த விழா ஜூலை 3, 4, 5 தேதிகளில் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விழாவுக்கான ஒருங்கிணைப்பாளராக அட்லாண்டா மாநகர தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவர் எழிலன் ராமராஜன், இணை ஒருங்கிணைப்பாளராக அட்லாண்ஆ தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவர் சுவாமிநாதன் அண்ணாமலையும் பொறுப்பேற்றுள்ளார்கள். அட்லாண்டா
 

அட்லாண்டாவில்  ஃபெட்னா 2020 தமிழ்விழா!ட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை (ஃபெட்னா)  33வது தமிழ் விழா அட்லாண்டா மாநகரில் நடைபெற உள்ளது.

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையுடன் அட்லாண்டா மாநகர தமிழ்ச்சங்கம் இணைந்து நடத்தும் இந்த விழா ஜூலை 3, 4, 5 தேதிகளில் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

விழாவுக்கான ஒருங்கிணைப்பாளராக அட்லாண்டா மாநகர தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவர் எழிலன் ராமராஜன், இணை ஒருங்கிணைப்பாளராக அட்லாண்ஆ தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவர் சுவாமிநாதன் அண்ணாமலையும் பொறுப்பேற்றுள்ளார்கள். 

அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்க செயற்குழுவினருடன், நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வர்லர்களும் இணைந்து விழாவுக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.  35 முதல் 40 குழுக்களாக வெவ்வேறு பணிகளை மேற்கொண்டுள்ளார்கள். 

அட்லாண்டாவில் சுமார் 2000க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் தமிழ்ப் பள்ளிகளில் தமிழ் மொழி பயின்று வருகிறார்கள். இந்த மாணவ மாணவிகள் தமிழ் விழா அரங்கத்தில் ”செம்மொழியாம் தமிழ்மொழி” பாடலை நேரடியாகப் பாடுவதற்கு தயாராகி வருகிறார்கள். இலக்கிய வினாடி விழா, தமிழ்த்தேனீ, குறள்தேனீ போன்ற வழக்கமான சிறப்பு நிகழ்ச்சிகளுடன் பல்வேறு புத்தம்புது நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை தமிழ்ச்சங்கங்கள் சார்பில் செய்து வருகிறார்கள்.

அட்லாண்டாவில் தன்னார்வலர்களின் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.  டொர்னடோ எச்சரிக்கை விடப்பட்ட நிலையில் தொடர்ந்து பெய்து வந்த அடைமழையையும் பொருட்படுத்தாமல் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

நான்கு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், விழாவு ஏற்பாடுகளுக்கான அடுத்தடுத்த பணிகள் குறித்து ஆலோசனைகள் மற்றும் திட்டமிடல்கள் மேற்கொள்ளப் பட்டன.

முன்னதாக 2009ம் ஆண்டு அட்லாண்டாவில் ஃபெட்னா தமிழ் விழா நடைபெற்றது. 11 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அட்லாண்டாவில் நடைபெற உள்ள தமிழ் விழா குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.

http://A1TamilNews.com

From around the web