சாத்தான்குளம் வியாபாரிகள் மரணம்! வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை கண்டனம்

சாத்தான்குளத்தில் வியாபாரிகளான தந்தை- மகன் இருவரும் போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்த சம்பவத்திற்கு வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (ஃபெட்னா) சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பாவி மக்கள் மீது அதிகாரத்தை செலுத்தும் தமிழ்நாடு காவல்துறையின் போக்கினை வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை வன்மையாகக் கண்டிப்பதாகவும் கூறியுள்ளார்கள். இது குறித்து பேரவை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது “தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில், தந்தை & மகன் வதைச்செய்து கொல்லப்பட்ட நிகழ்வை வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை
 

சாத்தான்குளம் வியாபாரிகள் மரணம்! வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை கண்டனம்சாத்தான்குளத்தில் வியாபாரிகளான தந்தை- மகன் இருவரும் போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்த சம்பவத்திற்கு வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (ஃபெட்னா) சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

அப்பாவி மக்கள் மீது அதிகாரத்தை செலுத்தும் தமிழ்நாடு காவல்துறையின் போக்கினை வட அமெரிக்கத் தமிழ்ச்சங்க‌ப் பேரவை வன்மையாகக் கண்டிப்பதாகவும் கூறியுள்ளார்கள். இது குறித்து பேரவை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது

“தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில், தந்தை & மகன் வதைச்செய்து கொல்லப்பட்ட நிகழ்வை வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை வன்மையாகக் கண்டிக்கிறது.

ஜெயராஜ் (வயது 58) பனைமரத் தடிகளை விற்பனை செய்யும் கடையும், அந்தக் கடையின் முன்புறம் அவரது மகன் பென்னிக்ஸ் (வயது 31) செல்போன் கடையும் நடத்தி வந்தார்கள். சம்பவத்தன்று மாலை 7.30 மணியளவில் கடையை அடைக்கச் சொல்லி சாத்தான்குளம் காவல் உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் மற்றும் காவலர்கள், ஜெயராஜைக் காவல் நிலயத்திற்கு அழைத்துச் சென்றனர், அவரது மகன் பென்னிக்ஸூம் காவல் நிலையம் சென்றிருக்கிறார்.

காவல் நிலையத்தில் தன் தந்தைக்கு நடந்த சித்திரவதையை பென்னிக்ஸ் கேள்வி எழுப்பியுள்ளார். அவரையும் கைது செய்து சித்திரவதை செய்தனர்; லத்தியைக் கொண்டு குதத்தில் குத்தியிருக்கிறார்கள். கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உள்ளானவர்களை நீதிபதி முன்னால் ஆஜர் படுத்தாமல் ரிமாண்ட் உத்தரவு போட்டதாகச் சொல்லப்படுகிறது.

நீதிமன்றம் அருகிலேயே சிறை இருக்கும் போது 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டனர். தாக்குதலுக்குள்ளான இருவரையும் மருத்துவ மனையில் சேர்க்க நீதிபதியோ, சிறை நிர்வாகமோ முயற்சி எடுக்கவில்லை. அனைத்து தரப்பினரும் சட்டத்திற்குப் புறம்பாக நடந்துள்ளனர். அதன் விளைவாக இருவரும் உயிரிழந்தனர்.

தமிழக அரசாங்கம் உடனடியாக ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரையும் சித்திரவதை செய்து கொன்ற காவல் அதிகாரிகள், காவலர்கள் மீது உடனடியாக கொலைக் குற்றத்தில் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்.

கொரோனாவை எதிர்த்து தமிழ்நாடு போராடிக் கொண்டிருக்கிற இந்த நேரத்தில், சாமானிய மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ள இந்தத் துன்பகரமான சூழலில், காவல்துறை மக்களிடம் கனிவுடன் நடக்க வேண்டும். மாறாக, தங்களின் அதிகாரத்தை அப்பாவி மக்கள் மீது செலுத்தும் தமிழ்நாடு காவல்துறையின் போக்கினை வட அமெரிக்கத் தமிழ்ச்சங்க‌ப் பேரவை வன்மையாகக் கண்டிக்கிறது.

கொல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் குடும்பத்தினருக்குப் பேரவை தனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறது.”

இவ்வாறு வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் சார்பில் கூறப்பட்டுள்ளது.

A1TamilNews.com

From around the web