நஞ்சை வயல்களுக்குள்ளே ‘நஞ்சு’ எரிவாயு குழாய் போடாதீங்க.. தூத்துக்குடியில் விவசாயிகள் கோரிக்கை!

தூத்துக்குடி: நாகப்பட்டினத்திலிருந்து தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனம் வரை ஓ.என்.ஜி.சி நிறுவனம் பதிக்கும் எரிவாயு குழாய் வயல்வெளிக்குள் வர வேண்டாம் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட குலையன்கரிசல் ஊராட்சியில் 2 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் நெல், வாழை விவசாயம் நடைபெற்று வருகிறது. தாமிரபரணி ஆற்றின் கடைசி அணையான ஸ்ரீவைகுண்டம் வடகால் பாசனத்திற்கு உட்பட்ட பொட்டைக்குளம், கோரம்பள்ளம் குளங்களுக்குட்பட்ட பாசனப் பகுதிகளாகும். இந்த குளங்களை வெட்டி, தடுப்பணை கட்டியவர் 144 ஆண்டுகளுக்கு முன்னால் ஆங்கிலேயர்
 

நஞ்சை வயல்களுக்குள்ளே  ‘நஞ்சு’ எரிவாயு குழாய் போடாதீங்க.. தூத்துக்குடியில் விவசாயிகள் கோரிக்கை!

தூத்துக்குடி:  நாகப்பட்டினத்திலிருந்து தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனம் வரை ஓ.என்.ஜி.சி நிறுவனம் பதிக்கும் எரிவாயு குழாய் வயல்வெளிக்குள் வர வேண்டாம் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட குலையன்கரிசல் ஊராட்சியில் 2 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் நெல், வாழை விவசாயம் நடைபெற்று வருகிறது. தாமிரபரணி ஆற்றின் கடைசி அணையான ஸ்ரீவைகுண்டம் வடகால் பாசனத்திற்கு உட்பட்ட பொட்டைக்குளம், கோரம்பள்ளம் குளங்களுக்குட்பட்ட பாசனப் பகுதிகளாகும். 

இந்த குளங்களை வெட்டி, தடுப்பணை கட்டியவர் 144 ஆண்டுகளுக்கு முன்னால் ஆங்கிலேயர் ஆட்சியின் நெல்லை மாவட்ட கலெக்டர் இருந்த ஆர்.கே. பக்கிள் துரை. அதற்கு முன்னால் மழையையும் காட்டு வெள்ளத்தையும் மட்டுமே நம்பி விவசாயம் செய்த மக்களுக்கு, தாமிரபரணி ஆற்றுத் தண்ணீர் மூலம் மூணுபோகம் நெல் விவசாயமும் வாழை விவசாயமும் செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 

சமீபத்த்தில் தான் ஊர்மக்கள் கலெக்டர் ஆர்.கே.பக்கிள் துரைக்கு நன்றி தெரிவித்தும், பொங்கலிட்டு வழிபாடும் செய்தனர்.இப்போதைய மாவட்ட கலெக்டர்  சந்தீப் நந்தூரி ஆர்.கே. பக்கிள் படத்தை திறந்தும் வைத்தார்.

இந்நிலையில் ஊரைச் சுற்றி வடக்கே, கிழக்கே நெல், வாழை வயல்களுக்கு மத்தியில் என ஓன்.என்.ஜி.சி நிறுவனத்தின் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை செயல்படுத்த முனைந்துள்ளார்கள். இது குறித்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கூடிய குலையன்கரிசல் விவசாயிகள் , மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் மனு வழங்கியுள்ளார்கள். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விவசாயிகள் குழு சார்பில் ஆஸ்கர் கூறியதாவது,

“தூத்துக்குடி மாவட்டம் குலையன்கரிசல் கிராமத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தில் நஞ்சை விவசாயம் செய்து வருகிறோம். ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டின் வடகால் பாசனத்தில் கடைசி குளம். பாரம்பரியமாக விவசாயம் தான் எங்கள் தொழில். விவசாயத்தைத் தவிர எங்களுக்கு வேறு எதுவும் தொழில் கிடையாது.

நாகப்பட்டினத்திலிருந்து தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்திற்கு எரிவாயு கொண்டு செல்ல ஓ.என்.ஜி.சி நிறுவனம் திட்டமிட்டுள்ளார்கள். கடைசிப் பகுதியில் எங்கள் நஞ்சை நிலம் வழியாக கொண்டு செல்ல முயல்கிறார்கள். நஞ்சை நிலத்தை விட்டு விட்டு வேறு நிலம் வழியாகக் கொண்டு செல்லுங்கள் என்று நாங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம்.
நஞ்சை வயல்களுக்குள்ளே  ‘நஞ்சு’ எரிவாயு குழாய் போடாதீங்க.. தூத்துக்குடியில் விவசாயிகள் கோரிக்கை!
ஆனால் எங்கள் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளாமல், இரவு நேரத்தில் சனி ஞாயிறு விடுமுறை நாட்களில் வந்து ஆரம்பப் பணிகளை தொடக்க முயல்கிறார்கள். விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், கிராம மக்கள் திரண்டு சென்று அவர்களை நிறுத்த வேண்டியதுள்ளது. மாவட்ட ஆட்சியரிடம் இரண்டு தடவை மனு அளித்துள்ளோம்.

இந்த தடவை மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர், ஓ.என்.ஜி.சி நிறுவனத்திடம் ஒரு வாரத்திற்குள் பேசி மாற்று வழியில் திட்டத்தை செயல்படுத்தச் சொல்கிறோம் என்று உறுதி கூறியுள்ளார். மாவட்ட ஆட்சியரின் உறுதி மொழி விவசாயிகளுக்கு நிம்மதியாக இருக்கிறது. சொன்னதை செய்வார் மாவட்ட ஆட்சியர் என்று நம்புகிறோம்,” என்று கூறியுள்ளார்.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நஞ்சை நிலத்தைத் தவிர்த்து மாற்று வழியில் எரிவாயு குழாய் பாதை மாற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.

From around the web