தோட்டத்தில் அழுகும் வாழைத்தார்! கண்ணீர் வடிக்கும் விவசாயிகள்!! அரசே வாங்குமா?

ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் தோட்டத்திலேயே வாழைத்தார் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வாழை பயிரடப்பட்டுள்ளது. வாழைத்தார் விளைந்து அறுவடைக்குத் தயாராக இருக்கும் நிலையில் ஊரடங்கு அமலில் இருப்பதால் வாங்குவதற்கு போதிய வியாபாரிகள் வராமல் அழுகிக் கொண்டிருக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து வாழைத்தார் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், கோயமுத்தூர், சென்னை போன்ற தொலைதூர நகரங்களுக்கும் செல்வதுண்டு. ஏப்ரல், மே மாதங்களில் நாள்தோறும் 50 முதல் 100 லாரிகள் வரையிலும்
 

தோட்டத்தில் அழுகும் வாழைத்தார்! கண்ணீர் வடிக்கும் விவசாயிகள்!! அரசே வாங்குமா?ரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் தோட்டத்திலேயே வாழைத்தார் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வாழை பயிரடப்பட்டுள்ளது. வாழைத்தார் விளைந்து அறுவடைக்குத் தயாராக இருக்கும் நிலையில் ஊரடங்கு அமலில் இருப்பதால் வாங்குவதற்கு போதிய வியாபாரிகள் வராமல் அழுகிக் கொண்டிருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து வாழைத்தார் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், கோயமுத்தூர், சென்னை போன்ற தொலைதூர நகரங்களுக்கும் செல்வதுண்டு. ஏப்ரல், மே மாதங்களில் நாள்தோறும் 50 முதல் 100 லாரிகள் வரையிலும் இந்த வாழைத்தார்கள் செல்வதும் உண்டு.

தவிர பக்கத்தில் உள்ள தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்செந்தூர், ஏரல், ஸ்ரீவைகுண்டம்  சந்தைகளுக்கும் ஏல அடிப்படையில் விற்பனைக்கு அனுப்புவார்கள் . ஊரடங்கு இருப்பதால் வழக்கமான சந்தைகள் பெரும்பாலும் திறக்கவில்லை. உள்ளூர் வியாபாரிகளாலும் அதிக கொள்முதல் செய்ய முடியாது.

விளைச்சல் அடைந்துள்ள வாழைத்தார்களை வெளியூர் சந்தைகளுக்கு அனுப்ப முடியாததால், உள்ளூர் வியாபாரிகள் மிகவும் குறைந்த விலைக்கு கேட்பதாக கூறப்படுகிறது. மேலும் ஊரடங்கு நேரத்தில் வியாபாரிகளே வெளி மாவட்ட சந்தைகளுக்கு அனுப்ப முயன்றால், லாரி வாடகை எக்கச்சக்கமாக இருக்கிறதாம். ஊரடங்குக்கு முன்னர் 8 ஆயிரம் ரூபாயாக இருந்த வாடகை தற்போது 20 ஆயிரம் ரூபாய் ஆகிறது.

அப்படி லாரி வாடகை கொடுத்து வெளிமாவட்டத்திற்கு அனுப்பி விற்றால் கூட நட்டத்திற்கு தான் விற்க முடியுதாம். ஒரு தாருக்கு 150 ரூபாய் வசூல் ஆனால் ஒரு தாருக்கு செலவு 170 ரூபாய் ஆகிறதாம். இப்படி நட்டம் அடைவதால்,  வாழைத்தாரை வெட்டாமல் விட்டு தோட்டத்திலேயே  அழுகி விடுகிறது.

தோட்டத்தில் அழுகும் வாழைத்தார்! கண்ணீர் வடிக்கும் விவசாயிகள்!! அரசே வாங்குமா?

தூத்துக்குடி மாவட்டத்தில் வாழைத்தாரை சேமித்து வைப்பதற்கு குளிர்பதன கிட்டங்கியும் இல்லை என்பதால், அழுகுவதை விட வேறு வழியே இல்லை என்று விவசாயிகள் தரப்பில் கூறப்படுகிறது.

அரசே கொள்முதல் செய்ய வேண்டும் அல்லது உரிய விலைக்கு விற்பதற்கு அரசு வழிவகை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர். விவசாயி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுப்பார் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் விவசாயிகள்!

A1TamilNews.com

From around the web