போலி இ-பாஸ் மோசடி! ஆம்னி பஸ்கள் ஓனர், டிரைவர் கைது!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மே31ம் தேதி வரை நான்காவது கட்ட ஊரடங்கு நாடு முழுவதும் அறிவிக்கப் பட்டுள்ளது.அவசர பணி காரணமாக சொந்த ஊர் திரும்ப விரும்புபவர்கள் செல்ல இருக்கும் மாநில அரசின் இபாஸ் பெற்றிருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தேனி மாவட்ட சோதனைச் சாவடியில் மதுரை வழியாக வந்த ஆம்னி பேருந்துகளை சோதனை செய்த போது அதிர்ச்சி தரும் விபரங்கள் வெளிப்பட்டன. போலியான இ பாஸ் மூலமே மகாராஷ்டிராவிலிருந்து வருவதாக தெரிவித்தனர். பேருந்து பறிமுதல் செய்யப்பட்டு
 

போலி இ-பாஸ் மோசடி! ஆம்னி பஸ்கள் ஓனர், டிரைவர் கைது!கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மே31ம் தேதி வரை நான்காவது கட்ட ஊரடங்கு நாடு முழுவதும் அறிவிக்கப் பட்டுள்ளது.அவசர பணி காரணமாக சொந்த ஊர் திரும்ப விரும்புபவர்கள் செல்ல இருக்கும் மாநில அரசின் இபாஸ் பெற்றிருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தேனி மாவட்ட சோதனைச் சாவடியில் மதுரை வழியாக வந்த ஆம்னி பேருந்துகளை சோதனை செய்த போது அதிர்ச்சி தரும் விபரங்கள் வெளிப்பட்டன. போலியான இ பாஸ் மூலமே மகாராஷ்டிராவிலிருந்து வருவதாக தெரிவித்தனர்.

பேருந்து பறிமுதல் செய்யப்பட்டு ஆண்டிபட்டி காவல் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. பேருந்தின் உரிமையாளர், மற்றும் டிரைவர்கள் நான்கு பேரையும் கைது செய்தது காவல்துறை.

பேருந்தில் இருந்த அனைத்துப் பயணிகளும் கொரோனா பரிசோதனை முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

முறையான அனுமதியின்றி வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள் மூலம் தென் மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாகவும், நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

A1TamilNews.com

From around the web