டிக்-டாக்கிற்கு போட்டியாக பேஸ்புக்! 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு!

இந்தியாவில் சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்ட பிறகு பல நிறுவனங்களும் சீன செயலிகளுக்கு மாற்றாக களத்தில் இறங்கியுள்ளன. பேஸ்புக் நிறுவனம், இன்ஸ்டாகிராம் உடன் ரீல்ஸ் சேவையை துவங்கியது. பிரேசில், ஜெர்மனி, பிரான்ஸை தொடர்ந்து நான்காவது நாடாக ரீல்ஸ் சேவையில் இந்தியா இணைந்தது. டிக்டோக் செயலிக்கு மாற்றாக கருதப்படும் ரீல்ஸில் 15 நொடிகள் வீடியோவை பயனர்கள் பல்வேறு அம்சங்களை பயன்படுத்தி எடிட் செய்து பதிவேற்ற இயலும். இந்நிலையில், அமெரிக்காவில் வரும் ஆகஸ்டில் தனது வீடியோ மேக்கிங் செயலியான ரீல்ஸ்
 

டிக்-டாக்கிற்கு போட்டியாக பேஸ்புக்! 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு!ந்தியாவில் சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்ட பிறகு பல நிறுவனங்களும் சீன செயலிகளுக்கு மாற்றாக களத்தில் இறங்கியுள்ளன. பேஸ்புக் நிறுவனம், இன்ஸ்டாகிராம் உடன் ரீல்ஸ் சேவையை துவங்கியது.

பிரேசில், ஜெர்மனி, பிரான்ஸை தொடர்ந்து நான்காவது நாடாக ரீல்ஸ் சேவையில் இந்தியா இணைந்தது. டிக்டோக் செயலிக்கு மாற்றாக கருதப்படும் ரீல்ஸில் 15 நொடிகள் வீடியோவை பயனர்கள் பல்வேறு அம்சங்களை பயன்படுத்தி எடிட் செய்து பதிவேற்ற இயலும்.

இந்நிலையில், அமெரிக்காவில் வரும் ஆகஸ்டில் தனது வீடியோ மேக்கிங் செயலியான ரீல்ஸ் ஆப்பை பேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது. இதனை பிரபலப்படுத்தும் வகையில், சீன செயலியான டிக்டோக்கில் மில்லியன் கணக்கில் பாலோயர்களை வைத்துள்ள படைப்பாளிகளை ரீல்ஸ் ஆப்பில் வீடியோ பதிவிட வருமாறு அழைப்பு விடுத்துள்ளது.

பிரத்யேகமாக வீடியோ வழங்குவதற்காக படைப்பாளிகளுக்கு அதிக பணத்தை அளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ‘வளர்ந்து வரும் படைப்பாளிகளை வெளியே கொண்டு வருவதிலும், இன்ஸ்டாகிராமில் புதிய நட்சத்திரங்களை உருவாக்க உழைப்பதிலும் எங்களுக்கு நீண்ட வரலாறு உள்ளது’ என்று பேஸ்புக் செய்தித் தொடர்பாளர் போர்ப்ஸ் இதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் அடுத்த 3 மாதங்களில், அமெரிக்காவில் 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

A1TamilNews.com

From around the web