நன்கொடை நாள்: காலை 8 மணி அமெரிக்க கிழக்கு நேரம் மறந்துடாதீங்க! #GivingTuesday

அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் “ThangsGivingDay” க்கு அடுத்து வரும் செவ்வாய் கிழமையை “GivingTuesday” என்று நன்கொடை வழங்குவதற்கான நாளாக அனுசரித்து வருகிறார்கள். பிறருக்கு உதவ வேண்டும், நல்லவற்றை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் 2012ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அறக்கட்டளையுடன் இணைந்து நியூயார்க் 92nd Street Y என்ற கலை, பண்பாட்டு அமைப்பு தொடங்கியது. தற்போது இது உலக அளவில் பிரசித்து பெற்றுள்ளது. இந்த நாளில் தன்னார்வ அமைப்புகளுக்கான நன்கொடை நிதி திரட்டுவது என்பது வழக்கமாகியும்
 

நன்கொடை நாள்: காலை 8 மணி அமெரிக்க கிழக்கு நேரம் மறந்துடாதீங்க! #GivingTuesdayமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் “ThangsGivingDay” க்கு அடுத்து வரும் செவ்வாய் கிழமையை “GivingTuesday” என்று நன்கொடை வழங்குவதற்கான நாளாக அனுசரித்து வருகிறார்கள்.

பிறருக்கு உதவ வேண்டும், நல்லவற்றை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் 2012ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அறக்கட்டளையுடன் இணைந்து நியூயார்க் 92nd Street Y என்ற கலை, பண்பாட்டு அமைப்பு தொடங்கியது. தற்போது இது உலக அளவில் பிரசித்து பெற்றுள்ளது. இந்த நாளில் தன்னார்வ அமைப்புகளுக்கான நன்கொடை நிதி திரட்டுவது என்பது வழக்கமாகியும் விட்டது.

“GivingTuesday” அன்று ஃபேஸ்புக் மூலம் நன்கொடை வழங்கினால் அதற்கு இணையான தொகையை ஃபேஸ்புக் நிறுவனமும் வழங்கும் என்று அறிவித்த பிறகு, #GivingTuesday நன்கொடை தொகை பெருமளவில் அதிகரித்துள்ளது. இந்த நாளில் மட்டும்ஃபேஸ்புக் 7 மில்லியன் டாலர்களுக்கு நன்கொடை தொகை வழங்குகிறது. ஃபேஸ்புக் மூலம் நன்கொடை திரட்டுபவர்களுக்கு, இந்த தொகையை வழங்குகிறார்கள்.

7 மில்லியன் டாலர்கள்

இது குறித்து Hope3 Foundation தன்னார்வ அமைப்பின் நிறுவனரும் தன்னார்வலருமான பழனி வைரவன் கூறியதாவது,

“ஃபேஸ்புக் பயனாளர் அல்லது தன்னார்வ அமைப்பு, குறிப்பிட்ட நோக்கத்திற்காக நன்கொடை திரட்டுவதாக ஃபேஸ்புக்கில் Fund Raising தொடங்க வேண்டும். செவ்வாய் கிழமை காலை அமெரிக்க கிழக்கு நேரம் 8 மணி முதல் இதில் திரட்டப்படும் நன்கொடைக்கு இணையாக ஃபேஸ்புக் நிறுவனமும் நன்கொடை வழங்கும். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் 7 மில்லியன் டாலர்கள் வரை இணை நன்கொடை வழங்குவார்கள்.

கடந்த ஆண்டு காலையில் வெகு விரைவாகவே 7 மில்லியன் டாலர்கள் நன்கொடை ஃபேஸ்புக் மூலம் திரட்டப்பட்டு விட்டதாக தெரிய வந்தது. அதன் பிறகு நன்கொடை வழங்கியவர்களுக்கு ஃபேஸ்புக் நிறுவனத்தின் நன்கொடை கிடைக்கவில்லை. Giving Tuesday நன்கொடையாளர்கள் காலை 8 மணி அளவிலேயே நன்கொடை வழங்கினால் ஃபேஸ்புக் நிறுவனத்தின் நன்கொடையும் சேர்ந்து இரட்டிப்பாகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. அதற்கு முன்னதாகவோ அல்லது பிறகோ நன்கொடை வழங்கினால், ஃபேஸ்புக் நிறுவனத்தின் நன்கொடை கிடைக்காது.

தமிழ்நாடு அறக்கட்டளை, ஜிப்மர் மருத்துவமனையின் அமெரிக்க நண்பர்கள் உள்ளிட்ட பல்வேறு தன்னார்வ அமைப்புகளும் ஃபேஸ்புக் மூலம் GivingTuesday நன்கொடையாக நிதி திரட்டுகிறார்கள். எங்கள் Hope3 Foundation அமைப்பும் இதே நாளில் நிதி திரட்டுகிறோம். உங்களுக்கு விருப்பமான நோக்கத்திற்காக, அமைப்புக்காக நன்கொடை வழங்குங்கள்,” என்று பழனி வைரவன் தெரிவித்தார்.

Hope3 Foundation தமிழ்நாட்டில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு உயர்கல்விக்கான நிதியுதவி செய்து வருகிறார்கள். நாற்பது மாணவர்கள் மருத்துவம், பொறியியல், விவசாயம், கணக்கியல், கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு படித்து வருகிறார்கள். அவர்களில் 10 மாணவர்கள் பகுதிநேர பணியாற்றி வருகிறார்கள். பட்டம் முடித்தவர்கள் அனைவரும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்கள். Hope3 Varsity திட்டம் மூலம் ஆங்கிலம், பொறியியல் மற்றும் பிற பாடங்களில் மாணவர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்படுகிறது. நன்கொடையாளர்கள், தன்னார்வலர்கள் என் 75 பேர் இந்த அறக்கட்டளையில் பங்காற்றி வருகிறார்கள் என்ற கூடுதல் தகவல்களையும் பழனி வைரவன் தெரிவித்தார்.

Giving Tuesday Fundraiser for Hope3 FoundationMore than money Hope3 needs your time. If you could volunteer your time…

Posted by Palani Vairavan on Thursday, November 28, 2019

“ஹூஸ்டன் தமிழ் இருக்கை” உள்ளிட்ட பல்வேறு தமிழ் சார்ந்த பணிகளுக்காகவும் பல தன்னார்வலர்கள் ஃபேஸ்புக்கில் நன்கொடை திரட்டி வருகிறார்கள். GivingTuesday நன்கொடையாளர்களே, செவ்வாய்கிழமை காலை 8 மணிக்கே நன்கொடையை செலுத்தி விடுங்கள். ஃபேஸ்புக் தரும் பணமும் சேர்ந்து இரட்டிப்பு நன்கொடை ஆகும். வேலை பார்க்கும் நிறுவனத்தின் தொகையும் சேரும் போது இது மும்மடங்காகும் என்பதும் கவனிக்கத் தக்கது.

https://www.A1TamilNews.com

From around the web