கொரோனா சிகிச்சைக்கு FabiFlu மருந்துகள் !புதிய எடிசன் அறிமுகம் !!

இந்தியா முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வரும் நிலையில் மருந்து இன்னும் கண்டறியப்படவில்லை.பிளாஸ்மா உட்பட சில சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனாவைக் கட்டுப்படுத்த உதவும் ஃபேவிபிரவிர் (FAVIPIRAVIR) மருந்துக்கு மத்திய அரசு ஜூன் மாதம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த மருந்து மும்பையைச் சேர்ந்த கிளென்மார்க் பார்மாக்யூடிகல் மருந்து நிறுவனம் மூலம் FabiFlu என்ற பிராண்ட் பெயரில் விற்பனைக்கு வருகிறது. இந்த மருந்தை கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆரம்பகட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மத்திய அரசு ஒப்புதல்
 

கொரோனா  சிகிச்சைக்கு FabiFlu மருந்துகள் !புதிய எடிசன் அறிமுகம் !!ந்தியா முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வரும் நிலையில் மருந்து இன்னும் கண்டறியப்படவில்லை.பிளாஸ்மா உட்பட சில சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனாவைக் கட்டுப்படுத்த உதவும் ஃபேவிபிரவிர் (FAVIPIRAVIR) மருந்துக்கு மத்திய அரசு ஜூன் மாதம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்த மருந்து மும்பையைச் சேர்ந்த கிளென்மார்க் பார்மாக்யூடிகல் மருந்து நிறுவனம் மூலம் FabiFlu என்ற பிராண்ட் பெயரில் விற்பனைக்கு வருகிறது. இந்த மருந்தை கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆரம்பகட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

ஒரு நோயாளி முதல் நாளில் 18 மாத்திரைகளையும், அடுத்த 13 நாள்களுக்கு தினம் ஒன்றுக்கு 8 மாத்திரைகள் வீதம் சாப்பிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், ஒரு கொரோனா நோயாளிக்கு இந்த மருந்துக்கு ஆகும் செலவு ரூ.12,500 ஆக இருந்தது.

தற்போது இதன் விலை மேலும் 27% குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாத்திரை விற்பனைக்கு வந்த போது மருந்தின் விலை ஒரு மாத்திரை ரூ.103 . அப்போது மருந்துச் சந்தையில், இந்த மருந்து 34 மாத்திரைகள் கொண்ட ஒரு அட்டை அதிகபட்ச சில்லறை விற்பனை விலையாக ரூ.3,500க்கு விற்பனைக்கு வந்தது.

இந்தியாவில், ஃபேபிஃப்ளூ மருந்துதான், முதல் முறையாக கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க வாய் வழியாக அளிக்க பரிந்துரை செய்யப்பட்ட முதல் மருந்து என்பது குறிப்பிடத்தக்கது.

A1TamilNews.com

From around the web