விசா, பர்மிட்டுகளுக்கு கால அவகாசம் நீட்டிப்பு! ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு!

உலகம் முழுவதும் வெளிநாட்டில் வசிப்பவர்கள் தங்களது தாயகம் திரும்பி வருகின்றனர். பலர் விமானங்கள் கிடைக்காத நிலையில் அங்கேயே சிக்கிக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு உதவி செய்யும் வகையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் மாட்டிக்கொண்ட வெளிநாட்டவர்களுக்கு அந்நாட்டின் ஃபெடரல் அத்தாரிட்டி ஃபார் ஐடன்டிட்டி அன்ட் சிட்டிசன்ஷிப் ஒரு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. கொரோனாவால் தாயகம் திரும்ப இயலாத நிலையில் இருப்பவர்களுக்கான வெளிநாட்டவர்களின் காலாவதியாகும் விசா மற்றும் பர்மிட்டுகளுக்கு காலக்கெடுவை நீட்டித்து வருகிறது அமீரகம். இதன்படி முடிவடைந்த விசா, பர்மிட் உள்ளவர்கள்
 

விசா, பர்மிட்டுகளுக்கு கால அவகாசம் நீட்டிப்பு! ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு!லகம் முழுவதும் வெளிநாட்டில் வசிப்பவர்கள் தங்களது தாயகம் திரும்பி வருகின்றனர். பலர் விமானங்கள் கிடைக்காத நிலையில் அங்கேயே சிக்கிக் கொண்டுள்ளனர்.

அவர்களுக்கு உதவி செய்யும் வகையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் மாட்டிக்கொண்ட வெளிநாட்டவர்களுக்கு அந்நாட்டின் ஃபெடரல் அத்தாரிட்டி ஃபார் ஐடன்டிட்டி அன்ட் சிட்டிசன்ஷிப் ஒரு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

கொரோனாவால் தாயகம் திரும்ப இயலாத நிலையில் இருப்பவர்களுக்கான வெளிநாட்டவர்களின் காலாவதியாகும் விசா மற்றும் பர்மிட்டுகளுக்கு காலக்கெடுவை நீட்டித்து வருகிறது அமீரகம்.

இதன்படி முடிவடைந்த விசா, பர்மிட் உள்ளவர்கள் தாங்கள் தங்கியிருக்கும் கூடுதல் நாட்களுக்கு அபராதத் தொகை ஏதும் செலுத்தத் தேவையில்லை. இந்த கால நீட்டிப்பு ஆகஸ்ட் 10ம் தேதியோடு முடிவடைந்த நிலையில், மேலும் ஒரு மாதம் நீட்டித்து உத்தரவு பிறப்பித்தது ஐ.சி.ஏ.

இந்த கால நீட்டிப்பு காலத்தில் அமீரகத்தில் இருந்து வெளியேறும், காலாவதியான விசா, பர்மிட் உடையவர்களுக்கு அதிக கட்டணத் தொகை, அபராதம் ஏதும் விதிக்கப்படமாட்டாது என்று தெரிவித்துள்ளது.

A1TamilNews.com

From around the web