கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இணையதளத்தின் வாயிலாக விளக்கங்கள்! சென்னை மாநகராட்சி அறிவிப்பு!

கொரோனாப் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மத்திய ,மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் தீவிரமாக செயல்படுத்தி வந்த போதிலும் தமிழகத்தில் அதிலும் குறிப்பாக சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 7205பேர். இதில் சென்னையில் மட்டும் 3800பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்நிலையில் கொரோனாவோடு வாழப் பழகுங்கள் என மத்திய அரசு அறிவித்திருக்கிறது. அனைவரையும் மருத்துவமனைகளில் வைத்து சிகிச்சை அளிக்க முடியாததாலும், பொதுமக்களின்
 

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  இணையதளத்தின் வாயிலாக விளக்கங்கள்! சென்னை மாநகராட்சி அறிவிப்பு!கொரோனாப் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மத்திய ,மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் தீவிரமாக செயல்படுத்தி வந்த போதிலும் தமிழகத்தில் அதிலும் குறிப்பாக சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 7205பேர். இதில் சென்னையில் மட்டும் 3800பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்நிலையில் கொரோனாவோடு வாழப் பழகுங்கள் என மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

அனைவரையும் மருத்துவமனைகளில் வைத்து சிகிச்சை அளிக்க முடியாததாலும், பொதுமக்களின் பாதுகாப்பிற்காகவும் சென்னையில் வசிக்கும் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் பின்பற்ற வேண்டிய நடைமுறை விளக்கங்களை இணைய தளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என மாநகராட்சி அறிவித்துள்ளது.

தனிப்பட்ட முறையில் இணையதள பக்கமும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை மக்கள் தங்களது உடல்நிலை குறித்த விவரங்களை இணையதளம் வாயிலாகத் தெரிவிக்கலாம் என மாநகராட்சி அறிவித்துள்ளது.

covid19.chennaicorporation.gov.in/c19/Symptoms/ என்ற இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் உடல்நிலை குறித்த தகவல்கள் தெரிவித்தவுடன் நாம் பின்பற்ற வேண்டிய விளக்கங்களும், நடைமுறைகளும் பதிவிடப்படும் என சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

A1TamilNews.com

From around the web