தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு.. டெல்லியை மீண்டும் கைப்பற்றுகிறார் கேஜ்ரிவால்!

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்று தேர்தலுக்குப் பிறகு நடத்தப்பட்ட அனைத்து கருத்துக் கணிப்புகளும் கூறுகின்றன. டைம்ஸ் நவ் -இஸ்போஸ் கருத்துக் கணிப்பில் ஆம் ஆத்மி கட்சிக்கு 47 இடங்களும் பாஜகவுக்கு 23 இடங்களும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஏபிபி நியூஸ் – சி வோட்டர் கருத்துக் கணிப்பு ஆம் ஆத்மி கட்சி 49 முதல் 63 இடங்களையும், பாஜக 5 முதல் 19 இடங்களையும் கைப்பற்றும் என்று கூறுகிறது.
 

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு.. டெல்லியை மீண்டும் கைப்பற்றுகிறார் கேஜ்ரிவால்!டெல்லி சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்று தேர்தலுக்குப் பிறகு நடத்தப்பட்ட அனைத்து கருத்துக் கணிப்புகளும் கூறுகின்றன.

டைம்ஸ் நவ் -இஸ்போஸ் கருத்துக் கணிப்பில் ஆம் ஆத்மி கட்சிக்கு 47 இடங்களும் பாஜகவுக்கு 23 இடங்களும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

ஏபிபி நியூஸ் – சி வோட்டர் கருத்துக் கணிப்பு ஆம் ஆத்மி கட்சி 49 முதல் 63 இடங்களையும், பாஜக 5 முதல் 19 இடங்களையும் கைப்பற்றும் என்று கூறுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு 0 முதல் 4 இடங்கள் கிடைக்கலாம் என்றும் அந்தக் கருத்துக் கணிப்பில் குறிப்பிடப் பட்டுள்ளது.

டிவி9 பாரத்வர்ஷ் – சிசெரோ கணிப்பின் படி ஆம் ஆத்மி 54 இடங்களிலும், பாஜக 15 இடங்களிலும் காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெல்லும்.

தி ரிபப்ளிக் டிவி – ஜன் கி பாத் கருத்துக் கணிப்பு ஆம் ஆத்மி கட்சிக்கு 48 முதல் 61 இடங்கள், பாஜகவுக்கு 9 முதல் 21 இடங்கள், காங்கிரஸுக்கு 1 இடம் கிடைக்கலாம் என்று கூறுகிறது.

2015ம் ஆண்டு தேர்தலில் மொத்தமுள்ள 70 சட்டசபை தொகுதிகளில் 67 ஐ ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. பெண்களுக்கு இலவச பஸ் பாஸ் உள்ளிட்ட ஏராளமான சமூகநலத் திட்டங்களையும், நிர்வாக சீர்திருத்தங்களையும் நிறைவேற்றியுள்ளதாக முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு பாராட்டுகள் குவிந்தது.

ஆனால் மத்திய பாஜக அரசு, யூனியன் பிரதேசமான டெல்லி அரசுக்கு, துணை நிலை கவர்னர் மூலம் தொடர்ந்து நெருக்கடிகளை கொடுத்து வந்தது. கவர்னர் மாளிகையில் முதல்வர் கேஜ்ரிவால் தொடர் உண்ணாவிரதம் இருந்த காட்சிகள் எல்லாம் நடந்தது.

டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் பிரச்சார மற்றும் தேர்தல் யுத்திகளை பிரஷாந்த் கிஷோரின் நிறுவனம் தான் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் திமுகவுடன் ஒப்பந்தம் செய்துள்ளதும் இந்த நிறுவனம் தான்.

அனைத்து கருத்துக் கணிப்புகளும் ஆம் ஆத்மி கட்சியே வெற்றி பெறும் என்று கூறினாலும், பாஜக 48 இடங்களைப் பெற்று ஆட்சி அமைக்கும் என்று டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி கூறியிருப்பது கவனிக்கத் தக்கது.

https://A1TamilNews.com

 

From around the web