1 முதல் +2 வரை அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வு தேதி அறிவிப்பு  

1 முதல் +2 வரை அனைத்து வகுப்புகளுக்கும் காலாண்டு, அரையாண்டு மற்றும் இறுதி தேர்வுக்கான தேதிகளும் விடுமுறை தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சி.பி.எஸ்.இக்கு இணையான பாட திட்டங்களையும், தனியார் பள்ளிகளுக்கு இணையான சீருடைகளையும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிமுகம் செய்துள்ளார். கல்வித் துறையில் பல்வேறு சீர்திருத்தங்களையும் இவர் செய்து வருகிறார். தற்போது 1 முதல் +2 வரையிலான வகுப்புகளுக்கு காலாண்டு, அரையாண்டு மற்றும் இறுதி தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக
 
1 முதல் +2 வரை அனைத்து  வகுப்புகளுக்கும் காலாண்டு, அரையாண்டு மற்றும் இறுதி தேர்வுக்கான தேதிகளும் விடுமுறை தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
தமிழகத்தில் சி.பி.எஸ்.இக்கு இணையான பாட திட்டங்களையும், தனியார் பள்ளிகளுக்கு இணையான சீருடைகளையும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிமுகம் செய்துள்ளார். கல்வித் துறையில் பல்வேறு சீர்திருத்தங்களையும் இவர் செய்து வருகிறார்.
 
தற்போது 1 முதல் +2  வரையிலான வகுப்புகளுக்கு காலாண்டு, அரையாண்டு மற்றும் இறுதி தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
 
இதுதொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
 
தேர்வு கால அட்டவணை விவரம்:
 
1 முதல் 8-ம் வகுப்பு வரை:
 
* காலாண்டு தேர்வு- செப்டம்பர் 17-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை,
 
* அரையாண்டு தேர்வு- டிசம்பர் 17-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை,
 
* இறுதித் தேர்வு- ஏப்ரல் 10-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை.
 
9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை:
 
* காலாண்டு தேர்வு- செப்டம்பர் 10-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை,
 
* அரையாண்டு தேர்வு- டிசம்பர் 10-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை,
 
* இறுதித் தேர்வு- ஏப்ரல் 8-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை(9-ம் வகுப்பு மட்டும்).
 
செப்டம்பர் 23-ந்தேதி முதல் அக்டோபர் 2-ந்தேதி வரையில் காலாண்டு விடுமுறை காலமாகவும், டிசம்பர் 23-ந்தேதி முதல் ஜனவரி 1-ந்தேதி வரை அரையாண்டு விடுமுறை காலமாகவும், ஏப்ரல் 19-ந்தேதி முதல் ஜூன் 2-ந்தேதி வரை கோடை விடுமுறை காலமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
– வணக்கம் இந்தியா 

From around the web