சத்தான மாலை ஸ்நாக்ஸ்.. மொறு மொறு சுவையில் ராகி முந்திரிப் பக்கோடா

தேவையான பொருட்கள் ராகி மாவு – 200 கிராம் கடலை மாவு – 50 கிராம் அரிசி மாவு – 50 கிராம் மிளகாய்த்தூள் – தேவைக்கேற்ப முந்திரி – 10 சீரகத்தூள் – 2 சிட்டிகை பச்சை மிளகாய் – 1 டால்டா – 1 டீஸ்பூன் பெரிய வெங்காயம் – 2 கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவைக்கேற்ப. செய்முறை: முதலில் டால்டாவை உருக்கிக் கொள்ளவும்.
 

சத்தான மாலை ஸ்நாக்ஸ்.. மொறு மொறு சுவையில் ராகி முந்திரிப் பக்கோடாதேவையான பொருட்கள்
ராகி மாவு  – 200 கிராம்
கடலை மாவு – 50 கிராம்
அரிசி மாவு – 50 கிராம்
மிளகாய்த்தூள் – தேவைக்கேற்ப
முந்திரி – 10
சீரகத்தூள் – 2 சிட்டிகை
பச்சை மிளகாய் – 1
டால்டா – 1 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் – 2
கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை:
முதலில் டால்டாவை உருக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் ராகி மாவு, கடலை மாவு, அரிசி மாவு, முந்திரி, சீரகத்தூள், நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, சமையல் சோடா, மிளகாய்த்தூள் தேவையான உப்பு சேர்த்து  நன்கு கலந்துக் கொள்ளவும்.

பிறகு சிறிதளவு தண்ணீர் விட்டு மாவைக் கெட்டியாகப் பிசிறி வைக்கவும்.
இப்போது ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி பிசிறி வைத்துள்ள மாவைப் பக்கோடாக்களாகப் போட்டு மொறு மொறுப்பாகப் பொரித்தெடுக்கவும். வனஸ்பதியைத் தவிர்க்க நினைப்பவர்கள் வெண்ணெய் சேர்க்கலாம். 

A1TamilNews.com

From around the web