இனிமேல் முதலமைச்சர் எடப்பாடி ‘டாக்டர்’.கே.பழனிசாமி!

டாக்டர். எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது. அக்டோபர் 20ம் தேதி சென்னையில் நடைபெறும் விழாவில் முதலமைச்சருக்கு இந்த டாக்டர் பட்டத்தை வழங்குகிறார்கள். புதிய நீதிக் கட்சியின் தலைவரும் வேலூர் நாடாளுமன்ற வேட்பாளருமான ஏ.சி.சண்முகத்திற்கு சொந்தமானது டாக்டர். எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம். இது ஒரு நிகர்நிலைப் பல்கலைக் கழகம் (Deemed University) ஆகும். இங்கு பொறியியல், மேலாண்மை, பார்மசி, மனித அறிவியல், பல்மருத்துவம்
 

இனிமேல் முதலமைச்சர் எடப்பாடி ‘டாக்டர்’.கே.பழனிசாமி!

டாக்டர். எம்ஜிஆர்  கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது.

அக்டோபர் 20ம் தேதி சென்னையில் நடைபெறும் விழாவில் முதலமைச்சருக்கு இந்த டாக்டர் பட்டத்தை வழங்குகிறார்கள். புதிய நீதிக் கட்சியின் தலைவரும் வேலூர் நாடாளுமன்ற வேட்பாளருமான ஏ.சி.சண்முகத்திற்கு சொந்தமானது டாக்டர். எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்.

இது ஒரு நிகர்நிலைப் பல்கலைக் கழகம் (Deemed University) ஆகும். இங்கு பொறியியல், மேலாண்மை,  பார்மசி, மனித அறிவியல், பல்மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் பட்ட, பட்ட மேற்படிப்புகள் உள்ளன. தமிழ்நாடு டாக்டர்.எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக் கழகத்திற்கும் டாக்டர். எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.

பேரறிஞர் அண்ணாவுக்குப் பிறகு தமிழ்நாடு முதலமைச்சர்களாக பதவி வகித்த கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய மூவருக்கும் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. அந்த வரிசையில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியும் இடம் பிடித்துள்ளார்.

அக்டோபர் 20ம் தேதி பட்டமளிப்பு விழாவுக்குப் பின் அதிகாரப்பூர்வமாக முதலமைச்சர் எடப்பாடி டாக்டர்.கே.பழனிசாமி என்று அழைக்கப்படுவார்.

– வணக்கம் இந்தியா

From around the web