விமானத்தில் நடு இருக்கை காலியாக வைக்க வேண்டும்! சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் நான்காவது கட்ட ஊரடங்கு மே31ம் தேதி வரை அறிவிக்கப்பட்டிருக்கிறது. படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மே 25முதல் உள்நாட்டு விமானசேவை துவங்கியுள்ளது. மேலும் வந்தே பாரத் திட்டத்தின் மூலம் வெளிநாடுகளில் சிக்கித் தவித்து வரும் இந்தியர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் பொருட்டும், சமூக விலகலைக் கடைப்பிடிக்கும் பொருட்டும் விமானங்களின் நடு இருக்கைகள் காலியாக விடப்பட வேண்டும் என்றும் பொது நல வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்டது. ரம்ஜானுக்காக
 

விமானத்தில் நடு இருக்கை காலியாக வைக்க வேண்டும்! சுப்ரீம் கோர்ட் உத்தரவு!கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் நான்காவது கட்ட ஊரடங்கு மே31ம் தேதி வரை அறிவிக்கப்பட்டிருக்கிறது. படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மே 25முதல் உள்நாட்டு விமானசேவை துவங்கியுள்ளது. மேலும் வந்தே பாரத் திட்டத்தின் மூலம் வெளிநாடுகளில் சிக்கித் தவித்து வரும் இந்தியர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் பொருட்டும், சமூக விலகலைக் கடைப்பிடிக்கும் பொருட்டும் விமானங்களின் நடு இருக்கைகள் காலியாக விடப்பட வேண்டும் என்றும் பொது நல வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்டது.

ரம்ஜானுக்காக கோர்ட் விடுமுறை என்ற போதிலும் வீடியோ கான்பரன்சிங் மூலம் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. விசாரணையில் மத்திய அரசு சார்பில் ஜூன் 6ம் தேதி வரை விமானங்கள் முன்பதிவு செய்யப்பட்டு விட்டதால் நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்களை எடுத்துரைத்தது.

அதன்படி ஜூன் 6ம் தேதிக்குப் பிறகு இயக்கப்படும் அனைத்து விமானங்களிலும் நடுப்பகுதி இருக்கைகள் காலியாக விடப்பட வேண்டும் என்ற அதிரடி உத்தரவை சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது.

A1TamilNews.com

From around the web