தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சொதப்பல்களும் ஊழல்களும்!

எப்போது மாநில மின்வாரியம் மத்திய தொகுப்புக்கு மாற்றப்பட்டதோ அப்போதிருந்து மின்சாரவாரியத்தில் சொதப்பல்களும் ஊழல்களும் அதிகமாகிவிட்டது என்று தோன்றுகிறது நாளொருமேனியும் பொழுதொரு ஊழலும் பெருகினாலும் சமீபத்தில் மக்களை நேரடியாக பாதிக்கும் ஊழல் என்றால் அது மின்சார கட்டண பிடுங்கல். இந்த மாதம் 9000 ரூபாய் கட்டினேன். எப்பவும் எனக்கு 2000 முதல் 2200க்குள் தான் வரும். நான்கு மடங்கு பில். என்ன கணக்கென்றே புரியவில்லை. இப்போது கொஞ்சநாளாக அநியாயத்திற்கு கரண்ட் கட் ஆகிறது. 30% மின்சாரபயன்பாடு குறைந்து போயுள்ள இந்த
 

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சொதப்பல்களும் ஊழல்களும்!எப்போது மாநில மின்வாரியம் மத்திய தொகுப்புக்கு மாற்றப்பட்டதோ அப்போதிருந்து மின்சாரவாரியத்தில் சொதப்பல்களும் ஊழல்களும் அதிகமாகிவிட்டது என்று தோன்றுகிறது

நாளொருமேனியும் பொழுதொரு ஊழலும் பெருகினாலும் சமீபத்தில் மக்களை நேரடியாக பாதிக்கும் ஊழல் என்றால் அது மின்சார கட்டண பிடுங்கல். இந்த மாதம் 9000 ரூபாய் கட்டினேன். எப்பவும் எனக்கு 2000 முதல் 2200க்குள் தான் வரும். நான்கு மடங்கு பில். என்ன கணக்கென்றே புரியவில்லை.

இப்போது கொஞ்சநாளாக அநியாயத்திற்கு கரண்ட் கட் ஆகிறது. 30% மின்சாரபயன்பாடு குறைந்து போயுள்ள இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் எதற்காக இத்தனை முறை மின்சார தடை வரவேண்டும்? இன்று காலையில் சென்ற மின்சாரம் இப்போது தான் வந்தது. வேலையெல்லாம் கெட்டது. இப்படி இருந்தால் எப்படி தொழில்கள் எப்படி மீண்டு வரும்? பொருளாதாரம் எப்பொழுது பழைய நிலைக்கு திரும்புவது?

முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்
திறப்பாடு இலாஅ தவர்
– அதிகாரம் : அமைச்சு , குறள் 640

முறைப்படித் தீட்டப்படும் திட்டங்கள்கூடச் செயல் திறன் இல்லாதவர்களிடம் சிக்கினால் முழுமையாகாமல் முடங்கித்தான் கிடக்கும்.

இந்தியாவிலேயே சமூகம், பொருளாதாரம், உட்கட்டமைப்பு என்று நன்றாக வளர்ந்து கொண்டிருந்த மாநிலம் தமிழ்நாடு. நீர் மின்சாரம், காற்றாலை மின்சாரம், அனல் மின்சாரம், அணுமின்சாரம், சூரிய மின்சாரம் என்று எல்லாவகையிலும் மின்சார கட்டமைப்புகள் கொண்டிருந்த ஒரே மாநிலம் தமிழ்நாடு தான்.

என்ன இருந்து என்ன பயன்? சரியான ஆட்சியாளர்கள் கையில் இல்லாததால் அனைத்தும் முடங்கி போயுள்ளது.

– கார்த்திகேயன்

A1TamilNews.com

From around the web