மின்வாரியம் பகல் கொள்ளையடிக்கிறது! பிரபல நடிகரின் பரபரப்பு குற்றச்சாட்டு!

கொரோனாத் தடுப்பு நடவடிக்கையாக கடந்த இரண்டு மாதங்களாக மின்வாரியக் கணக்கெடுப்பு எடுக்கப்படவில்லை. தற்போது படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் வீடு, வீடாக ரீடிங் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்ற இரண்டு மாதங்களுக்கும் சேர்த்து நடிகர் பிரசன்னா வீட்டில் ரூ70000 மின்சாரக் கட்டணமாக ரீடிங் எடுக்கப்பட்டுள்ளது. இரண்டு மாதங்களாக பழைய கட்டணம் செலுத்தினாலே போதும் என அரசு அறிவித்திருந்தது. கட்டணம் செலுத்தப்படாவிட்டாலும் மின் துண்டிப்பு இருக்காது எனவும் தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி தற்போது மின்கட்டணத்தொகை
 

மின்வாரியம் பகல் கொள்ளையடிக்கிறது! பிரபல நடிகரின்  பரபரப்பு  குற்றச்சாட்டு!கொரோனாத் தடுப்பு நடவடிக்கையாக கடந்த இரண்டு மாதங்களாக மின்வாரியக் கணக்கெடுப்பு எடுக்கப்படவில்லை. தற்போது படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் வீடு, வீடாக ரீடிங் எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் சென்ற இரண்டு மாதங்களுக்கும் சேர்த்து நடிகர் பிரசன்னா வீட்டில் ரூ70000 மின்சாரக் கட்டணமாக ரீடிங் எடுக்கப்பட்டுள்ளது. இரண்டு மாதங்களாக பழைய கட்டணம் செலுத்தினாலே போதும் என அரசு அறிவித்திருந்தது. கட்டணம் செலுத்தப்படாவிட்டாலும் மின் துண்டிப்பு இருக்காது எனவும் தமிழக அரசு அறிவித்திருந்தது.

அதன்படி தற்போது மின்கட்டணத்தொகை ரூ 70000 என்பது பகல் கொள்ளை. இந்தக் கட்டணமானது பிரசன்னா குடியிருக்கும் வீடு, அவரது தாய் வீடு, மாமியார் வீடு என மூன்று வீட்டிற்கும் சேர்த்து இந்த கட்டணம் வந்திருக்கிறது. இந்தத் தொகையானது ஜனவரியை விட பல மடங்கு அதிகரிப்பதாக நேரடியாக குற்றம் சாட்டியிருக்கிறார்.

இவ்வளவு தொகையை செலுத்த முடிந்தாலும், இதே நிலைமை ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு ஏற்பட்டால் அவர்களால் எப்படி இந்த கட்டணத்தை செலுத்த முடியும் எனவும் நடிகர் பிரசன்னா கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரசன்னாவின் வீட்டில் மறுபடியும் மின் கணக்கெடுப்பு நடத்தப்படும் எனவும், தவறாக இருக்கும் பட்சத்தில் உடனடியாக சரி செய்யப்படும் எனவும் மின்வாரியம் அறிவித்துள்ளது. தமிழக அரசின் மீதும், மின்வாரியத்தின் மீதும் நேரடியாகக் குற்றம் சாட்டியது பெரும் பரபரப்பை உருவாக்கி வருகிறது.

A1TamilNews.com

 

From around the web