வீடுகளில் மின் கணக்கீடு செய்யப்படும் முறை குறித்து மின்சார வாரியம் விளக்கம்!

கொரோனா பரவலைத் தடுப்பதற்காக அறிவிக்கப்பட்டிருந்த தொடர் ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் இரண்டு மாதங்களாக மின்சார ரீடிங் எடுக்கப்படவில்லை . ஜூன் மாத துவக்கத்திலிருந்தே வீடு,வீடாக ரீடிங் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது எடுக்கப்பட்டு வரும் கணக்கெடுப்பில் பல்வேறு கட்ட குளறுபடிகள் நடப்பதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. நடிகர் பிரசன்னா உட்பட பலரிடம் இந்த கணக்கீடு சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது. இதைத் தெளிவுபடுத்த மின்சார வாரியமே கணக்கெடுக்கும் முறை குறித்து விளக்கம் அளித்துள்ளது. அதன்படி வழக்கமாக இரண்டு மாதங்களுக்கு
 

வீடுகளில் மின் கணக்கீடு செய்யப்படும் முறை குறித்து   மின்சார வாரியம் விளக்கம்!கொரோனா பரவலைத் தடுப்பதற்காக அறிவிக்கப்பட்டிருந்த தொடர் ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் இரண்டு மாதங்களாக மின்சார ரீடிங் எடுக்கப்படவில்லை . ஜூன் மாத துவக்கத்திலிருந்தே வீடு,வீடாக ரீடிங் எடுக்கப்பட்டு வருகிறது.

தற்போது எடுக்கப்பட்டு வரும் கணக்கெடுப்பில் பல்வேறு கட்ட குளறுபடிகள் நடப்பதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. நடிகர் பிரசன்னா உட்பட பலரிடம் இந்த கணக்கீடு சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது. இதைத் தெளிவுபடுத்த மின்சார வாரியமே கணக்கெடுக்கும் முறை குறித்து விளக்கம் அளித்துள்ளது.

அதன்படி வழக்கமாக இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின்கட்டணம் கணக்கிடப்பட்டு வழங்கப்படும். தற்போது தாமதமாக அதாவது நான்கு மாதம் கழித்து மின் கணக்கீடு எடுக்கப்பட்டு வருகிறது.

இதில் நான்கு மாதத்திற்கு சேர்த்து மொத்தமாக கணக்கிடப்பட்டு அவை இரண்டு இரண்டு மாதங்களாக பிரிக்கப்பட்டு கட்டணக் கணக்கீடு செய்யப்படுகிறது என மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

மேலும் நுகர்வோர்களுக்கு சந்தேகம் உருவாகும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட மின்சார அலுவலகத்திடம் தங்களது சந்தேகத்தை தெளிவுபடுத்திக் கொள்ளலாம் எனவும், உடனடியாகத் தீர்வு காணும் வகையில் அனைத்து பிரிவுகளும் செயல்பட்டு வருவதாகவும் மின்வாரியம் தெரிவித்துள்ளது.

A1TamilNews.com

From around the web