தினமும் சராசரியாக 8 மாத்திரை விழுங்கும் முதியோர்

அதிகமாக மாத்திரை சாப்பிட வேண்டாம் என மூத்த குடிமக்களை மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். சராசரியாக மூத்த குடிமக்கள் ஒவ்வொருவரும் தினசரி 8 மாத்திரைகள் சாப்பிடுவது ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது இதுதொடர்பாக தனியார் மருந்தக கல்லூரிகள் சார்பில் 104 மூத்த குடிமக்களின் மருந்துச் சீட்டுகளை வைத்து ஆய்வு நடத்தி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், மருந்துகளைப் பரிந்துரைப்பது குறித்து பல்வேறு துறை நிபுணர்கள் ஒருவருக்கொருவர் தெரிவித்துக் கொள்வது இல்லை என ஆய்வில் கூறப்பட்டுள்ளது. நோயாளிகளும் மறுமுறை மருத்துவரை அணுகாமல் நீண்ட நாட்களுக்கு
 

தினமும் சராசரியாக 8 மாத்திரை விழுங்கும் முதியோர்திகமாக மாத்திரை சாப்பிட வேண்டாம் என மூத்த குடிமக்களை மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். சராசரியாக மூத்த குடிமக்கள் ஒவ்வொருவரும் தினசரி 8 மாத்திரைகள் சாப்பிடுவது ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது

இதுதொடர்பாக தனியார் மருந்தக கல்லூரிகள் சார்பில் 104 மூத்த குடிமக்களின் மருந்துச் சீட்டுகளை வைத்து ஆய்வு நடத்தி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், மருந்துகளைப் பரிந்துரைப்பது குறித்து பல்வேறு துறை நிபுணர்கள் ஒருவருக்கொருவர் தெரிவித்துக் கொள்வது இல்லை என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

நோயாளிகளும் மறுமுறை மருத்துவரை அணுகாமல் நீண்ட நாட்களுக்கு முன்பு கொடுத்த மருந்துகளையே சாப்பிடுகின்றனர் என்றும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள மூத்த குடிமக்கள் ஏற்கனவே சாப்பிடும் மாத்திரைகள் பற்றி தெரிந்து கொள்ளாமல் மேலும் சில மாத்திரைகளை‌ பணியில் இருக்கும் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர் என்பதும் தெரியவந்துள்ளது.

இதுபோன்ற காரணங்களால் மூத்த குடிமக்கள் பலரும் தேவையற்ற மாத்திரைகள் பலவற்றை சாப்பிடுகின்றனர் என்பதோடு, இதற்காக அதிக தொகையை செலவிடுகிறார்கள் எனவும் ஆய்வு மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூத்த குடிமக்கள் சராசரியாக தினமும் 8 மாத்திரைகளை சாப்பிடுவதாகவும், பலரும் வலி மற்றும் பல்வேறு நோய்களுக்காக தினமும் குறைந்தது 2 முதல் அதிகபட்சமாக15 மாத்திரைகளை சாப்பிடுகிறார்கள் என்றும் தெரிய வந்துள்ளது. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாத்திரைகள் எதிர்வினைகளை ஏற்படுத்துவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

A1TamilNews.com

From around the web