பெருவில் எட்டாவது அமெரிக்க நாடுகளின் கூட்டமைப்பு மாநாடு… ட்ரம்ப் பங்கேற்கிறார்!

லிமா (பெரு): அமெரிக்க கண்டத்திலுள்ள நாடுகள் பங்கேற்கும் எட்டாவது அமெரிக்க நாடுகள் கூட்டமைப்பு மாநாடு ( Summit of the Americas ) பெரு நாட்டின் தலைநகர் லிமா நகரில் நடைபெற உள்ளது. ஏப்ரல் 13, 14ம் தேதிகளில் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பங்கேற்கிறார். அமெரிக்க கண்டத்தில் உள்ள வட, மத்திய, தென் அமெரிக்க நாடுகளின் அதிபர்களும் பங்கேற்கிறார்கள். மேற்கு பிராந்திய நாடுகளின் பிரச்சனைகள், சோதனைகள் பற்றி விவாதித்து தீர்வு
 

பெருவில் எட்டாவது அமெரிக்க நாடுகளின் கூட்டமைப்பு மாநாடு… ட்ரம்ப் பங்கேற்கிறார்!
லிமா (பெரு): அமெரிக்க கண்டத்திலுள்ள நாடுகள் பங்கேற்கும் எட்டாவது அமெரிக்க நாடுகள் கூட்டமைப்பு மாநாடு ( Summit of the Americas ) பெரு நாட்டின் தலைநகர் லிமா நகரில் நடைபெற உள்ளது. ஏப்ரல் 13, 14ம் தேதிகளில் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பங்கேற்கிறார். அமெரிக்க கண்டத்தில் உள்ள வட, மத்திய, தென் அமெரிக்க நாடுகளின் அதிபர்களும் பங்கேற்கிறார்கள்.

மேற்கு பிராந்திய நாடுகளின் பிரச்சனைகள், சோதனைகள் பற்றி விவாதித்து தீர்வு காணும் நோக்கத்தில் இந்த மாநாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்த அமைப்பின் தலாவது மாநாடு 1994ம் ஆண்டு ஃப்ளோரிடாவின் மயாமி நகரில் நடைபெற்றது. தொடர்ந்து பொலிவியா, சிலி, கனடா, மெக்சிகோ, அர்ஜென்டினா, ட்ரினிடாட், கொலம்பியா, பனாமா ஆகிய நாடுகளில் நடைபெற்றுள்ளது. தற்போது 8 வது மாநாடு பெரு நாட்டில் நடைபெற உள்ளது.

சமூக, பொருளாதார, அரசியல் பிரச்சனைகளும் அதற்கான தீர்வுகள் பற்றியும் ஆலோசித்து முடிவுகள் எடுக்கப்படும். வெனிசூலாவில் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி மற்ற தென் அமெரிக்க நாடுகளுக்கும் பிரச்சனையாக உருவெடுத்துள்ள நிலையில், அது குறித்து முக்கிய விவாதம் இடம்பெறும் எனத் தெரிகிறது.

 

பெருவில் எட்டாவது அமெரிக்க நாடுகளின் கூட்டமைப்பு மாநாடு… ட்ரம்ப் பங்கேற்கிறார்!

பெருவில் எட்டாவது அமெரிக்க நாடுகளின் கூட்டமைப்பு மாநாடு… ட்ரம்ப் பங்கேற்கிறார்!

From around the web