அதள பாதாளாத்தில் பொருளாதாரம்!! சிக்கனம் தேவை இக்கணம்!

பொருளாதார மந்தநிலை, கொரோனா பேரிடரால் வேலையிழப்புகள் பரவலாக நடக்க ஆரம்பித்து விட்டன. சுயதொழில் செய்வோருக்கும் எதிர்பார்த்த வருமானம் இல்லை. மாதச் சம்பளகாரர்களுக்கோ எப்போது வேலை போகும் என கத்தி மீது நிற்கும் நிலை. இத்தகைய பொருளாதார மந்தநிலை சுழற்சி பத்தாண்டு, இருபதாண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படும் ஒன்றுதான் என்றாலும், முன்பு எப்போதையும் விட மையப் பொருளாதார அச்சுடன் இப்போது அதிகம் பிணைக்கப்பட்டுள்ளதால் இதன் பாதிப்பு தற்காலத்தில் அதிகமாக தாக்குகிறது. எங்கோ கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் பெட்ரோல் விலை
 

அதள பாதாளாத்தில் பொருளாதாரம்!! சிக்கனம் தேவை இக்கணம்!பொருளாதார மந்தநிலை, கொரோனா பேரிடரால் வேலையிழப்புகள் பரவலாக நடக்க ஆரம்பித்து விட்டன. சுயதொழில் செய்வோருக்கும் எதிர்பார்த்த வருமானம் இல்லை. மாதச் சம்பளகாரர்களுக்கோ எப்போது வேலை போகும் என கத்தி மீது நிற்கும் நிலை.

இத்தகைய பொருளாதார மந்தநிலை சுழற்சி பத்தாண்டு, இருபதாண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படும் ஒன்றுதான் என்றாலும், முன்பு எப்போதையும் விட மையப் பொருளாதார அச்சுடன் இப்போது அதிகம் பிணைக்கப்பட்டுள்ளதால் இதன் பாதிப்பு தற்காலத்தில் அதிகமாக தாக்குகிறது. எங்கோ கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் பெட்ரோல் விலை கூடி வீட்டிற்கு வாங்கும் தக்காளி விலை உயருகிறது. டோல் கட்டணம் அதிகரித்தால் முள்ளங்கி விலை உயருகிறது. 

மும்பையில் ஷேர் மார்க்கெட் விழுந்தால், ருபாய் மதிப்பு சரிந்தால் இறக்குமதி மடிக்கணிணி விலை உயருகிறது. பணம் அனைத்தும் வங்கிகளில் டெபாசிட் செய்ய வைக்கப்பட்டு நம் பணத்தை நாம் எடுத்து செலவு செய்ய கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. 

ஆனால், மறுபுறம் கணக்கில்லாமல் கடன் வாங்கி கார்டில் தேய்க்கும் கலாச்சாரம் ஊக்குவிக்கப்படுகிறது. வரலாற்றிலேயே இருந்திராத அளவு பொருளாதார நீரோட்டத்தில் இரண்டற கலந்து வாழும் வாழ்க்கையை வாழ்கிறோம். இதனால் பொருளாதாரத்தில் ஏற்படும் சிறு மாற்றமும் நம் வாழ்வில் பெரும் பாதிப்புகளை உண்டாக்குகிறது.

இத்தகைய காரணங்களால் முன்னெப்போதையும் விட இந்தப் பொருளாதார மந்தநிலை நம் அனைவரையும் பாதிக்கிறது. இந்தச் சூழலில் நம்மைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி?

1. சிக்கனம்
2. சிக்கனம்
3. சிக்கனம்

மேற்கூறிய மூன்று விதிகளைப் பின்பற்றினாலே போதும்.

தேவையற்ற எதையும் வாங்க வேண்டாம். EMIஇல் பர்னிச்சர் வாங்குவது, புதிய மாடல் மொபைல் மாற்றுவது போன்ற அத்தியாவசியமற்ற செலவுகளை தவிர்க்க வேண்டும். விருந்தனர்களை “சோஃபா இல்லை. பிளாஸ்டிக் சேரில் அமருங்கள்” என்பதில் கௌரவக் குறைச்சல் ஏதும் இல்லை.

தேவையான அளவு ஆடைகளை மட்டும் வாங்கவும் “Buy for Rs 3499 get Rs1000 free” போன்ற trap களில் மாட்ட வேண்டாம். பிராண்டட் இல்லாத நல்ல ஆடைகளை தேர்வு செய்யலாம். விலை கணிசமாக குறையும்.

வார இறுதியில் ஷாப்பிங் செல்வதை தவிர்த்தாலே தேவையற்ற பொருட்களை வாங்குவதைத் தவிர்க்கலாம். அடிக்கடி அமேசான், பிளிப்கார்ட் போன்ற தளங்களில் மேய்ந்துவிட்டு கை துருதுருவென எதையாவது ஆர்டர் செய்வதை தவிர்க்க வேண்டும்.

குடும்பத்தோடு தியேட்டருக்கு சென்று பாடாவதி படத்தை பல ஆயிரம் செலவு செய்து பார்ப்பதை விட வீட்டிலேயே பல நல்ல சினிமாக்களை ஸ்ட்ரீம் செய்யலாம். அதே தியேட்டர் ஃபீல் வருவதற்கு பாப்கார்ன் ஸ்விக்கியில் ஆர்டர் செய்யலாம். மூவாயிரம் ரூபாய் செலவு நூறு ரூபாயோடு போகும். மந்தநிலை முடியும் வரை காஸ்ட்லி சுற்றுலாக்களை தள்ளிப் போடலாம்.

ஒரு சிறிய வேலைக்காக டூவீலர், கார் எடுத்துக்கொண்டு பெருங்களத்தூரில் இருந்து ஸ்பென்சர் வரை பயணம் செய்வதை தவிர்க்கலாம். கேரியர் சார்ந்த, சாராத திறமைகளை வளர்த்துக் கொள்ள பயிற்சி வகுப்புகளில் சேரலாம். இதன்மூலம் ஓய்வு நேரம் பயன்படுத்தப்பட்டு spending craving குறையும். இப்போது ஆன்லைனிலேயே பல கோர்ஸ்கள் மலிவாக கிடைக்கின்றன.

நன்கொடை கொடு தமிழா, நிதி அனுப்பு தமிழா, ஜெயந்தி விழா பக்தரே போன்ற மெசேஜ்களை படிக்காமலே டெலீட் செய்வது மனதிற்கும் உடலிற்கும் நல்லது. மினிமலிஸ்டிக் லைஃப் ஸ்டைல் பற்றிய புத்தகங்களைப் படிக்கலாம். சிக்கனமாக இருப்பதைப் பற்றிக் கேட்டால் பெரிய லெக்சர் அடித்து எஸ்கேப் ஆகலாம்.

பொருளாதாரம் சரியாகும் வரை உடல்நலம், கல்வி தவிர மற்ற அனைத்திலும் கஞ்சத்தனத்தை கையாளலாம். தவறே இல்லை. பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பதை நினைவில் வைத்து செயல்படுவோம்.

– உமாமகேஸ்வரன் பன்னீர்செல்வம்

A1TamilNews.com

From around the web