கொரோனாவிலிருந்து குணமடைந்து பணிக்குத் திரும்பிய துணை போலீஸ் கமிஷனர்!!

ஊரடங்கு உத்தரவை அமல்படுத்துவதற்காக காவல் துறையினர் அல்லும் பகலும் அரும்பாடு பட்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நடவடிக்கைகளில் அவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு விடுகிறது. சென்னை மாநகர காவல்துறையில் உயர் அதிகாரிகள் உள்பட 262 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. 1 கூடுதல் கமிஷனர், 2 துணை கமிஷனர்கள், 4 உதவி கமிஷனர்கள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட இன்ஸ்பெக்டர்களும் இதில் அடங்குவர். அரசு மருத்துவமனைகளில் இவர்களுக்கு முறையான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
 

கொரோனாவிலிருந்து குணமடைந்து பணிக்குத் திரும்பிய துணை போலீஸ் கமிஷனர்!!ரடங்கு உத்தரவை அமல்படுத்துவதற்காக காவல் துறையினர் அல்லும் பகலும் அரும்பாடு பட்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நடவடிக்கைகளில் அவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு விடுகிறது.

சென்னை மாநகர காவல்துறையில் உயர் அதிகாரிகள் உள்பட 262 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. 1 கூடுதல் கமிஷனர், 2 துணை கமிஷனர்கள், 4 உதவி கமிஷனர்கள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட இன்ஸ்பெக்டர்களும் இதில் அடங்குவர். அரசு மருத்துவமனைகளில் இவர்களுக்கு முறையான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
 
பாதிக்கப்பட்டவர்களில் பலர் குணமடைந்து வீடு திரும்பி வருகிறார்கள். முற்றிலுமாக குணமடைந்தவர்கள், மருத்துவர்களின் அறிவுரைக்குப் பிறகு அலுவலகம் திரும்பி மீண்டும் பணியிலும் சேர்ந்து வருகிறார்கள்
 
அண்ணாநகர் துணை கமிஷனர் முத்துசாமி, அவருடைய கார் ட்ரைவர் மற்றும் உடன் இருக்கும் போலீஸ்காரருடன் கொரோனாவிலிருந்து குணமடைந்து மீண்டும் பணியில் சேர்ந்தனர். ஒமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் குணமடைந்து வீடு திரும்பினார். வீட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டனர். தடாக்டர்கள் ஆலோசனையின்படி தனது கார் ட்ரைவர் மற்றும் போலீஸ்காரருடன் துணை கமிஷனர் முத்துசாமி பணிக்கு திரும்பினார்.போலீஸ் பேண்டு வாத்தியம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
 
போலீஸ் கமிஷனர்டாக்டர் ஏ.கே.விஸ்வநாதன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். கூடுதல் கமிஷனர்கள் பிரேம்ஆனந்த் சின்கா, ஜெயராம், இணை கமிஷனர் விஜயகுமாரி, துணை கமிஷனர்கள் பகலவன், திருநாவுக்கரசு, டாக்டர் சுதாகர், ராஜேந்திரன் மற்றும் ஏராளமான போலீசார் திரண்டு வந்து கைதட்டி வரவேற்பு கொடுத்தனர்.
 

From around the web