கொரோனாவை விரட்டியடிக்க கப சுர குடிநீர்! தமிழக மக்கள் ஆர்வம்!!

சர்வதேச அளவில் உலகை அச்சுறுத்தி வரும் கொரானோ வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரானாவின் தாக்கத்திற்கு மருந்து கண்டுபிடிக்க தீவிர முயற்சியில் மருத்துவர்கள் போராடி வருகின்றனர். ஆனால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பவர்களை கொரானோ தாக்குவதில்லை. அப்படியே தாக்கினாலும் அதிலிருந்து குணமாகும் சக்தியையும் ‘கப சுர குடிநீர்` தருகிறது என்கிறது சித்த மருத்துவம். பிரதமர் மோடி தலைமையில், ஆயுர்வேதம், சித்தா, யுனானி மருத்துவ துறை சார்ந்த வல்லுநர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக்
 

கொரோனாவை விரட்டியடிக்க கப சுர குடிநீர்!  தமிழக மக்கள் ஆர்வம்!!ர்வதேச அளவில் உலகை அச்சுறுத்தி வரும் கொரானோ வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரானாவின் தாக்கத்திற்கு மருந்து கண்டுபிடிக்க தீவிர முயற்சியில் மருத்துவர்கள் போராடி வருகின்றனர்.
ஆனால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பவர்களை கொரானோ தாக்குவதில்லை. அப்படியே தாக்கினாலும் அதிலிருந்து குணமாகும் சக்தியையும் ‘கப சுர குடிநீர்` தருகிறது என்கிறது சித்த மருத்துவம்.

பிரதமர் மோடி தலைமையில், ஆயுர்வேதம், சித்தா, யுனானி மருத்துவ துறை சார்ந்த வல்லுநர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கொரோனா வைரஸ் அறிகுறிகளான சளி, காய்ச்சல், இருமல், மூச்சுவிட சிரமப்படுதல் போன்ற பிரச்சனைகளை கபசுரக் குடிநீர் சீர் செய்யும் என்று எடுத்துரைக்கப்பட்டது.

மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் கபசுரக் குடிநீர் பெரும் பங்காற்றும். இதில் சுக்கு, திப்பிலி, இலவங்கம், ஆடாதொடை இலை, சீந்தல், சிறுதேக்கு, வட்டத்திருப்பி வேர், கோரைக்கிழங்கு, நிலவேம்பு, கற்பூரவல்லி இலை, கடுக்காய் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட பாரம்பரிய மூலிகை பொருட்களை ஒன்றாக சேர்த்து கபசுர குடிநீர் தயார் செய்யப்படுவதாக மூத்த சித்த மருத்துவரில் ஒருவரும், பேராசிரியருமான ஜெய்ப்பிரகாஷ் நாராயணன் தெரிவித்துள்ளார்.

அனைத்து நாட்டு மருந்துக்கடைகளிலும் இந்தக் கபசுரகுடிநீர் பொடியாகவோ, சூரணமாகவோ கிடைக்கிறது. ஒரு டீஸ்பூன் தேன் அல்லது சுடுநீரில் கலந்து வெறும் வயிற்றிலோ அல்லது இரவு படுப்பதற்கு முன்போ அருந்திட உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

கொரானோ மட்டுமல்ல எந்த வைரஸ் தொற்றிலிருந்தும் நம்மை காக்கும் என்றும் அக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

A1TamilNews.com

From around the web