அதிகப்படியான கொழுப்பை குறைக்க தினமும் இஞ்சிச் சாறு குடிங்க!

உடல் பருமனாக உள்ளவர்கள் உடல் எடையைக் குறைக்க பல்வேறு முறைகளை கையாண்டு விரக்தியடைந்து எடைக் குறைத்தலை நிறுத்தி விடுவார்கள் . உண்மையான எடைக் குறைப்பு என்பது உடலில் சேர்ந்திருக்கும் தேவையற்ற எடையைக் குறைத்தாலே போதுமானது. அந்த வகையில் மிக எளிதாக வீட்டில் இருந்த படியே தேவையற்ற கொழுப்பை சில வாரங்களில் குறைக்க முடியும். நமது அன்றாட உணவில் காரத்திற்கு சேர்க்கப்படும் இஞ்சி இதனாலேயே இயல்பான நோய் எதிர்ப்பு சக்தி காரணியாக செயல்படுவதுடன் தேவையற்ற கொழுப்பை குறைக்கவும் பெருமளவு
 

அதிகப்படியான  கொழுப்பை குறைக்க தினமும் இஞ்சிச் சாறு குடிங்க!டல் பருமனாக உள்ளவர்கள் உடல் எடையைக் குறைக்க பல்வேறு முறைகளை கையாண்டு விரக்தியடைந்து எடைக் குறைத்தலை நிறுத்தி விடுவார்கள் . உண்மையான எடைக் குறைப்பு என்பது உடலில் சேர்ந்திருக்கும் தேவையற்ற எடையைக் குறைத்தாலே போதுமானது.

அந்த வகையில் மிக எளிதாக வீட்டில் இருந்த படியே தேவையற்ற கொழுப்பை சில வாரங்களில் குறைக்க முடியும். நமது அன்றாட உணவில் காரத்திற்கு சேர்க்கப்படும் இஞ்சி இதனாலேயே இயல்பான நோய் எதிர்ப்பு சக்தி காரணியாக செயல்படுவதுடன் தேவையற்ற கொழுப்பை குறைக்கவும் பெருமளவு பயன்படுகிறது என்பது ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இஞ்சியின் காரம் நமது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.வாரம் ஒருமுறையாவது இஞ்சி சாறு குடித்து வந்தால் நுரையீரலில் சேரும் சளியைத் தடுக்கலாம். வாயுத் தொல்லை பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.

ஆனால் தினமும் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் இஞ்சியை தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து இஞ்சிச்சாறு குடித்து வர சில வாரங்களிலேயே உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்து விடும்.

இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீரணம், வாய் நாற்றம் நீங்கி உடல் சுறு சுறுப்பை பெறலாம்.

A1TamilNews.com

From around the web