அமெரிக்க அரசியலில் வரலாற்று சாதனை! ஜோ பைடனின் சிறந்த தேர்வு கமலா ஹாரிஸ்! டாக்டர் ராஜன் நடராஜன் பெருமிதம்!! – Exclusive

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் துணை அதிபர் வேட்பாளராக இந்திய வம்சாவளி கமலா ஹாரிஸை அறிவித்துள்ளார் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன். கமலா ஹாரிஸுக்கும், அவரை தேர்வு செய்ததற்காக ஜோ பைடனுக்கும் அனைத்து தரப்பிலிருந்தும் வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்த வண்ணம் உள்ளது. நவம்பர் மாதம் 3ம் தேதி நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் அமெரிக்க வரலாற்றிலேயே முதன் முறையாக இந்திய வம்சாவளியில், அதுவும் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவருக்குப் பெண்ணாகப் பிறந்தவரான கமலா ஹாரிஸ், ஜனநாயகக்
 

அமெரிக்க அரசியலில் வரலாற்று சாதனை! ஜோ பைடனின் சிறந்த தேர்வு கமலா ஹாரிஸ்! டாக்டர் ராஜன் நடராஜன் பெருமிதம்!! – Exclusive

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் துணை அதிபர் வேட்பாளராக இந்திய வம்சாவளி கமலா ஹாரிஸை அறிவித்துள்ளார் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன். கமலா ஹாரிஸுக்கும், அவரை தேர்வு செய்ததற்காக ஜோ பைடனுக்கும் அனைத்து தரப்பிலிருந்தும் வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்த வண்ணம் உள்ளது.

நவம்பர் மாதம் 3ம் தேதி நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் அமெரிக்க வரலாற்றிலேயே முதன் முறையாக இந்திய வம்சாவளியில், அதுவும் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவருக்குப் பெண்ணாகப் பிறந்தவரான கமலா ஹாரிஸ், ஜனநாயகக் கட்சியின் சார்பில் துணை அதிபர் பதவி வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ளார்.

அமெரிக்காவில் மேரிலாண்ட் மாநில அரசின் துணை வெளியுறவு அமைச்சராகப் பதவி வகித்து, தற்போது அம்மாநில போக்குவரத்து ஆணையாரக உள்ள தமிழரான டாக்டர் ராஜன் நடராஜன் இந்த அறிவிப்பை பெரிதும் வரவேற்றுள்ளார்.

ஜனநாயகக் கட்சி அதிபர் மற்றும் துணை அதிபர் வேட்பாளர்கள் ஜோ பைடன் – கமலா ஹாரிஸ், இருவருக்கும் ஆதரவு அளிக்கும் வகையில் Indian Americans for Biden – Harris என்ற அமைப்பினைத் தொடங்கி, அவர்களின் வெற்றிக்கு அரும்பாடு பட்டு வருகிறார்.  இது குறித்து  டாக்டர். ராஜன் நடராஜனை தொடர்பு கொண்டு பேசியபோது அவர் கூறியதாவது, 

அமெரிக்க அரசியலில் வரலாற்று சாதனை! ஜோ பைடனின் சிறந்த தேர்வு கமலா ஹாரிஸ்! டாக்டர் ராஜன் நடராஜன் பெருமிதம்!! – Exclusive

“ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர், ஜோ பைடன், செனட்டர் கமலா ஹாரிஸ் அவர்களை துணை அதிபர் வேட்பாளராக அறிவித்திருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி. இதை முழு மனதுடன் வரவேற்கிறேன்.  இது ஒரு சிறந்த தேர்வு.  ஏனெனில், கமலா ஹாரிஸ் அவர்கள் ஊக்கத்தின் ஊற்று; மிகச் சிறந்த நிர்வாகத் திறன் படைத்தவர், அனுபவசாலி.  அமெரிக்காவின் பன்முகத் தன்மைக்கு ஒரு எடுத்துக்காட்டு.   முக்கியமாக, டொனால்ட் ட்ரம்ப்புடன் நேரடியாக மோதும் வல்லமை பெற்றவர். 

கமலா ஹாரிஸ் அனைவரையும் அரவணைக்கும் அமெரிக்காவின் பிம்பம் எனலாம்.  துரிதமாக மாறும் பல்வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள் அங்கம் வகிக்கும் அமெரிக்க சமுதாய அரங்கில், அத்தகைய பன்னாட்டுப் பாரம்பரியத்தை ஒருங்கிணைக்க வல்ல சக்தியாக உருவெடுத்துள்ளார்.  ஜமைக்காவினைச் சேர்ந்த தந்தை மற்றும் இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த தாய் அவர்களுக்குப் பெண்ணாகப் பிறந்த இவர் அமெரிக்க நாட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக மிளிர்கிறார்.  கறுப்பின அமெரிக்கர்களுக்கு மட்டுமன்றி, அமெரிக்க அதிபர் தேர்தலில் தம் ஓட்டுரிமையால் மாற்றம் நிகழ்த்த வல்ல கோடானு கோடி ஆசிய அமெரிக்கர்களுக்கும் இது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு

கமலா ஹாரிஸின் வாழ்க்கை, அனைத்து அமெரிக்கர்களையும் அரவணைத்து மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. ஜமைக்கா மற்றும் இந்தியாவிலிருந்து குடியேறிய பெற்றோர்களுக்கு மகளாகப் பிறந்த கமலா ஹாரிஸ், அமெரிக்காவின் எதிர்காலத்தின் மீது பெரும் நம்பிக்கையை ஏற்படுத்துகிறார். 

கருப்பின அமெரிக்கர்களுக்கு மட்டுமல்லாமல், லட்சக்கணக்கான தெற்காசிய அமெரிக்கர்களையும் ஊக்கப்படுத்துகிறது. தெற்காசிய அமெரிக்கர்கள் அமெரிக்காவின் முக்கியமான வாக்காளர்களாக மாறிவருகிறார்கள் என்பதை கவனிக்கும் போது, கமலா ஹாரிஸின் வெற்றியின் முக்கியத்துவமும் தெரிய வருகிறது,” என்று டாக்டர்.ராஜன் நடராஜன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவுக்கு நெருக்கமான அமெரிக்க இந்தியரான டாக்டர்.ராஜன் நடராஜன், அதிபர் தேர்தலில் “பைடன் – ஹாரிஸ்” அணிக்கு முக்கிய பங்காற்றி வருகிறார்.  இந்தியன் அமெரிக்கன்ஸ் ஃபார் பைடன்- ஹாரிஸ் என்ற அமைப்பைத் தொடங்கி தேர்தல் களத்தில் தீவிரமான களப்பணி ஆற்றத் தொடங்கி உள்ளார்.

A1TamilNews.com Exclusive

 

From around the web