தமிழிசையை கிண்டல் செய்யாதீர்கள்!

தமிழிசையை ஏன் கிண்டல் செய்கிறீர்கள்? அவர் தமிழச்சி என்பதாலா? அப்பா காங்கிரஸில் தமிழ் வியாபாரம் செய்கிறார். சித்தப்பா காங்கிரஸில் டி.வி வியாபாரம் செய்கிறார். இவர் பி.ஜே.பியில் வார்த்தை வியாபாரம் செய்கிறார். எந்தகட்சி ஆட்சிக்கு வந்தாலும் அது ஆளும்கட்சி குடும்பம் என்கிற பெருமை கொண்டவராயிற்றே… அவரை ஏன் கிண்டல் செய்கிறீர்கள்? அவர் கருப்பாக இருக்கிறார் என்பதாலா? திராவிடத்தை அழிக்க வில்லன் அவதாரம் எடுத்திருக்கும் மோடி தமிழ்நாட்டில் ஒரு காமெடி பெண்ணை உலவவிட்டு நம்மை சிரிக்க வைத்தே அழித்தொழிப்பு வேலையை
 

தமிழிசையை கிண்டல் செய்யாதீர்கள்!

மிழிசையை ஏன் கிண்டல் செய்கிறீர்கள்?
அவர் தமிழச்சி என்பதாலா?

அப்பா காங்கிரஸில் தமிழ் வியாபாரம் செய்கிறார். சித்தப்பா காங்கிரஸில் டி.வி வியாபாரம் செய்கிறார். இவர் பி.ஜே.பியில் வார்த்தை வியாபாரம் செய்கிறார். எந்தகட்சி ஆட்சிக்கு வந்தாலும் அது ஆளும்கட்சி குடும்பம் என்கிற பெருமை கொண்டவராயிற்றே…

அவரை ஏன் கிண்டல் செய்கிறீர்கள்?
அவர் கருப்பாக இருக்கிறார் என்பதாலா?

திராவிடத்தை அழிக்க வில்லன் அவதாரம் எடுத்திருக்கும் மோடி தமிழ்நாட்டில் ஒரு காமெடி பெண்ணை உலவவிட்டு நம்மை சிரிக்க வைத்தே அழித்தொழிப்பு வேலையை செய்வதற்கு வசதியாக காமெடி தர்பார் நடத்தி மகிழ்விக்கிறாரே…?

அவரை ஏன் கிண்டல் செய்கிறீர்கள்?
அவர் தலைமுடி அடங்க மறுக்கிறது என்பதாலா?

குறைந்த மதிப்பெண் எடுத்து, தியாகி கோட்டாவில் இடம்பிடித்து, மக்கள் வரிப்பணத்தில் டாக்டராகி இப்போது காவி கத்தியை கையில் எடுத்துக் கொண்டு தமிழ் உணர்வுகளை வெட்டி எறிந்து கொண்டிருக்கிறாரே….

அவரை ஏன் கிண்டல் செய்கிறீர்கள்?
அவர் உயரம் குறைவாக இருப்பதாலா?

போராடிய விவசாயிகளை அடித்து விட்டு தப்பிக்க மருத்துவமனையில் படுத்திருக்கும் பெண்ணை பரிசோதித்து “அவர் முகத்தோல் உரிந்திருக்கிறது” என்று கண்டுபிடித்த சிறப்பான டாக்டராயிற்றே…

அவரை ஏன் கிண்டல் செய்கிறீர்கள்
அவர் ஸ்கேன் டாக்டர் என்பதாலா?

தயவு செய்து தமிழிசையை தரக்குறைவாக கிண்டல் செய்யாதீர்கள்.

அவரை அப்படி நாம் கிண்டல் செய்யத்தான் மோடி உலவ விட்டிருக்கிறார் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

தமிழிசை மூலம் காமெடி ஷோ காட்டிக்கொண்டே… எச்.ராஜா மூலம் வில்லத்தனத்தை அரங்கேற்றுவதுதான், காவி சர்வாதிகாரத்தின் ‘ஆக்ஷன் ராவணா’ திட்டம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

– முகமது மீரான்

From around the web