போலியோ சொட்டு மருந்து நாள்! மிஸ் பண்ணாதீங்க!

இந்தியா முழுவதும் 2020-ம் ஆண்டு ஜனவரி 19-ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என்று மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. தமிழ் நாட்டில் ஏறக்குறைய 72 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. இளம்பிள்ளை வாதம் எனப்படும் போலியோவை ஒழிக்கும் வகையில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. 1994-ம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி மற்றும் மார்ச் என இரண்டு தவணையாக போலியோ சொட்டு
 

போலியோ சொட்டு மருந்து நாள்! மிஸ் பண்ணாதீங்க!

ந்தியா முழுவதும் 2020-ம் ஆண்டு ஜனவரி 19-ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என்று மத்திய சுகாதாரத்துறை  அறிவித்துள்ளது.  தமிழ் நாட்டில் ஏறக்குறைய  72 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. இளம்பிள்ளை வாதம் எனப்படும் போலியோவை ஒழிக்கும் வகையில்  5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

1994-ம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி மற்றும் மார்ச் என இரண்டு தவணையாக போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டு  வருகிறது
இந்தியாவில் போலியோ ஒழிக்கப்பட்டு விட்டதால், ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சொட்டு மருந்து வழங்கும் புதிய நடைமுறையை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம்  இப்போது  நடத்தி வருகிறது.

இந்த முறையில் 2020-ம் ஆண்டுக்கான போலியோ சொட்டு மருந்து தினம் வருகிற ஜனவரி 19-ம் தேதி தமிழ் நாடு உட்பட அனைத்து மாநிலங்களிலும் நடைபெறும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தை பொறுத்த வரை  மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள், பஸ் நிறுத்தங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெறும். இதற்கான பணிகளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

https://www.A1TamilNews.com

From around the web