ரஜினி போட்டிருக்கும் செருப்பு கலரை கவனிச்சீங்களா?

பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று நேற்றிரவு மெழுகுவர்த்தி ஏந்தி வீட்டிற்கு வெளியே நின்று புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த ரஜினிகாந்தின் செருப்பு சிலருடைய கவனத்தை ஈர்த்துள்ளது. வெள்ளை வேட்டி, சந்தனக்கலர் ஜிப்பா, கண்ணில் கண்ணாடியுடன் நியூயார்க் சுதந்திராதேவி சிலை போல் மெழுவர்த்தியை தலைக்கு உயரே கையை உயர்த்திப் பிடித்தபடி நின்றிருந்தார். அவர் போட்டிருந்த ரப்பர் செருப்பின் கலர் இப்போது சிலருடைய கவனத்தை ஈர்த்து, அதற்கு அரசியல் சாயம் பூசி வருகிறார்கள். ரஜினிகாந்த் போட்டிருக்கும் ரப்பர் செருப்பில் கருப்பு –
 

ரஜினி போட்டிருக்கும் செருப்பு கலரை கவனிச்சீங்களா?பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று நேற்றிரவு மெழுகுவர்த்தி ஏந்தி வீட்டிற்கு வெளியே நின்று புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த ரஜினிகாந்தின் செருப்பு சிலருடைய கவனத்தை ஈர்த்துள்ளது.

வெள்ளை வேட்டி, சந்தனக்கலர் ஜிப்பா, கண்ணில் கண்ணாடியுடன் நியூயார்க் சுதந்திராதேவி சிலை போல் மெழுவர்த்தியை தலைக்கு உயரே கையை உயர்த்திப் பிடித்தபடி நின்றிருந்தார்.

அவர் போட்டிருந்த ரப்பர் செருப்பின் கலர் இப்போது சிலருடைய கவனத்தை ஈர்த்து, அதற்கு அரசியல் சாயம் பூசி வருகிறார்கள். ரஜினிகாந்த் போட்டிருக்கும் ரப்பர் செருப்பில் கருப்பு – சிவப்பு வண்ணங்கள் இருக்கிறது.

தமிழ்நாட்டில் கருப்பு-சிவப்பு என்றாலே அது திமுகவின் அடையாளமாகிப் போய்விட்டதால், ரஜினிகாந்தின் செருப்பு கலருக்கும் இதற்கும் முடிச்சி போட்டு சமூகத்தளங்களில் கமெண்ட் போட்டு ரசித்து வருகிறார்கள் ரஜினி ரசிகர்கள்.

ரஜினி போட்டிருக்கும் செருப்பு கலரை கவனிச்சீங்களா?

இந்த அளவுக்கு தரம் தாழ்ந்து அரசியல் செய்பவரா ரஜினிகாந்த்? எந்த கட்சியின் கடந்தகாலம் பற்றிப் பேசமாட்டேன், நான் என்ன செய்வேன் என்பதை மட்டுமே சொல்லி மக்களிடம் வாக்கு கேட்பேன் என்று சொன்னவராச்சே!

ரஜினி செருப்பில் கருப்பு சிவப்பு இருப்பது குறித்து உடன்பிறப்புகளின் எதிர்வினை எப்படி இருக்கும் என்பது தான் இப்போதைய கேள்விக்குறி?

A1TamilNews.com

From around the web