காலாவுக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தடை விதிச்சாரா? இது அவருக்கு தெரியுமா?

ஆடவா: காலா திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிடனும்ன்னு எல்லாம் வாலண்டியரா வந்து முட்டு கொடுத்த பாஜகவினரை ‘சைலண்ட்’ ஆக்கி விட்டு, காலாவை எதிர்த்தே தீருவோம்னு முழக்கமிட்ட எல்லோரையும் ‘ஆதரவு’ தெரிக்க வச்சுட்டு, தெறி மாஸ் காட்டிகிட்டு இருக்கார் ரஜினிகாந்த். எதிர்ப்பு தெரிவிச்ச கோஷ்டிகள் செய்த சேட்டைகள் இன்னும் வாட்ஸ் அப்பில் சுத்திகிட்டு தான் இருக்கு. காலாவுக்கு இண்டர்நேஷனல் லெவல்ல எதிர்ப்பு இருக்குன்னு படாத பாடு பட்டு மீம்ஸ் போட்டுருக்காங்க பாருங்க. அதைப் பார்த்தா சிரிக்கிறதா, அழுறதான்னு தெரியல்ல. ரிட்டயர்டுரவுடி
 

காலாவுக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தடை விதிச்சாரா? இது அவருக்கு தெரியுமா?ஆடவா: காலா திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிடனும்ன்னு எல்லாம் வாலண்டியரா வந்து முட்டு கொடுத்த பாஜகவினரை ‘சைலண்ட்’ ஆக்கி விட்டு, காலாவை எதிர்த்தே தீருவோம்னு முழக்கமிட்ட எல்லோரையும் ‘ஆதரவு’ தெரிக்க வச்சுட்டு, தெறி மாஸ் காட்டிகிட்டு இருக்கார் ரஜினிகாந்த்.

எதிர்ப்பு தெரிவிச்ச கோஷ்டிகள் செய்த சேட்டைகள் இன்னும் வாட்ஸ் அப்பில் சுத்திகிட்டு தான் இருக்கு. காலாவுக்கு இண்டர்நேஷனல் லெவல்ல எதிர்ப்பு இருக்குன்னு படாத பாடு பட்டு மீம்ஸ் போட்டுருக்காங்க பாருங்க. அதைப் பார்த்தா சிரிக்கிறதா, அழுறதான்னு தெரியல்ல.

ரிட்டயர்டுரவுடி 2.0 என்ற மீம்ஸ் க்ருப் போட்டுருக்கிற அந்த மீம்மில் ‘ அப்பாவி மக்களை சமூக விரோதி என கூறிய ரஜினியின் காலா படத்தை கனடாவில் தடை விதித்தார் கனடா பிரதமர்’ ன்னு போட்டு கீழே ‘- ஜஸ்டின் ட்ரூடோ’ அறிக்கை விட்டவர் பெயர் மாதிரி கனடா பிரதமர் பெயரையே போட்டுருக்காங்க.

இந்த தகவல் நியூஸ்18 தமிழ் தொலைக் காட்சியில் வந்தது ஒரு ஸ்டில்லும் அதற்கு கீழே நடிகர் விஜய் படத்தைப் போட்டு ‘ஒரு கனடா பிரதமருக்கு இருக்கிற அக்கற (ஸ்பெல்லிங் மிஸ்டேக் பாஸ்) இந்திய பிரதமருக்கு இல்லை… இந்த மகிழ்சியான (திரும்பவும் ஸ்பெல்லிங்லே கோட்டை விட்டுட்டீங்களே பாஸ்) செய்தியை ஒவ்வொரு தமிழனும் சேர் செய்யுங்க’ ன்னு அன்பான வேண்டுகோளும் விடுத்துள்ளார்கள்.

கனடா பிரதமர் சொன்னதாக உள்ள செய்தியை அந்த தொலைக்காட்சி ஜூன் 4ம் தேதி வெளியிட்டுள்ளதாம். இது அந்த தொலைக்காட்சிக்கோ அல்லது கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கோ தெரியுமா?

உண்மை என்னன்னா கனடாவில் 7 தியேட்டர்களில் காலா திரைப்படம் வெளியாகியுள்ளது. ட்ரோண்டோ வட்டாரத்தில் 3 தியேட்டர்களிலும், மாண்ட்ரியால் எட்மண்டன், வான்கூவர், கால்கரி நகரங்களில் தலா ஒரு தியேட்டரிலும் வெளியிடப் பட்டுள்ளது.

ஒருவேளை காலா படத்தை வெளியிட்டதால் இந்த நகரங்களை எல்லாம் ஜஸ்டின் ட்ரூடோ, ட்ரம்புக்கு தாரை வார்த்து கொடுத்துட்டாரோ? யாருக்குத் தெரியும். அடுத்த மீம்ஸ் இப்படியும் வரலாம்.

காலாவுக்கு கனடாவில் முதல் வார இறுதியில் 2 லட்சம் கனேடிய டாலர்களுக்கும் அதிகமான வசூல் என்ற தகவல் கிடைத்ததாக அமெரிக்காவின் பிரபல முன்னணி வினியோகிஸ்தர் நம்மிடம் தெரிவித்தார்.

வாட்ஸ் அப்பையும் அதில் வரும் மீம்ஸ்களையும் மட்டுமே ஒருத்தர் படித்து வந்தால், நிச்சயம் இந்த உலகத்தில் நடக்கும் உண்மையான விஷயங்கள் எதையும் அவர் தெரிந்து கொள்ள மாட்டார் என்பது நிச்சயம்.

முன்னெல்லாம் ‘கருத்துப் படம்’ என்ற கார்ட்டூன்களில் அரசியல் மற்றும் அன்றாடப் பிரச்சனைகளை சுட்டிக்காட்டி நகைச்சுவையாக வெளியிடுவார்கள். கார்ட்டூனிஸ்டுகளின் கைவண்ணத்தில் ஓவியங்களாக அது இருக்கும்.

போட்டோஷாப் உள்ளிட்ட டெக்னாலஜிகள் உதவியுடன் கார்டூன்களின் நவீன வடிவமாக வந்தது தான் மீம்ஸ். ஆனால் அது பொய்களை பிரச்சாரம் செய்யும், கோயபல்ஸின் மறுவடிவமாக மாறிவிட்டது தான் பெரிய அவலம்.

வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக தளங்களில் பரவும் பொய்யான பிரச்சாரங்களிலிருந்து தமிழ் இனம் மீண்டால் தான் அடுத்த தலைமுறை தமிழர்களுக்கு விடிவு காலம் இருக்கும் போலிருக்கு!

 

From around the web