ஆகஸ்ட் மாதம் இறுதி வரை வீட்டு கடன் இ.எம்.ஐ, கிரெடிட் கார்ட் கடன், வாகனக்கடன் செலுத்த வேண்டாம்!

கொரோனா ஊரடங்கால் இந்தியாவின் பொருளாதாரம் கடுமையாக சரிந்துள்ள நிலையில் அதை மீட்டெடுக்க ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான பொருளார திட்டங்களை நிதி அமைச்சர் அறிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக ரிசர்வ் வங்கி கவர்னர் சில முக்கிய அறிவிப்புக்களை இன்று வெளியிட்டுள்ளார். அதன் படி ரெப்போ வட்டி விகிதம் 4.0 சதவீதமாக குறைக்கப்படும். வீடு மற்றும் வாகனக் கடன் தவணைகளை செலுத்த ஏற்கனவே 3 மாதங்கள் சலுகை வழங்கப்பட்டிருக்கும் நிலையில் தற்போது ஆகஸ்ட் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வங்கிகள்
 

ஆகஸ்ட் மாதம் இறுதி வரை வீட்டு கடன் இ.எம்.ஐ, கிரெடிட் கார்ட் கடன், வாகனக்கடன் செலுத்த வேண்டாம்!கொரோனா ஊரடங்கால் இந்தியாவின் பொருளாதாரம் கடுமையாக சரிந்துள்ள நிலையில் அதை மீட்டெடுக்க ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான பொருளார திட்டங்களை நிதி அமைச்சர் அறிவித்திருந்தார்.

அதன் தொடர்ச்சியாக ரிசர்வ் வங்கி கவர்னர் சில முக்கிய அறிவிப்புக்களை இன்று வெளியிட்டுள்ளார். அதன் படி ரெப்போ வட்டி விகிதம் 4.0 சதவீதமாக குறைக்கப்படும்.
வீடு மற்றும் வாகனக் கடன் தவணைகளை செலுத்த ஏற்கனவே 3 மாதங்கள் சலுகை வழங்கப்பட்டிருக்கும் நிலையில் தற்போது ஆகஸ்ட் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

வங்கிகள் மூலம் சிறு தொழில்களுக்கான கடன் வழங்கு திட்டத்திற்காக ரூ.15000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பின் மூலம் நடுத்தர மக்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் மிகுந்த பயனடைவார்கள் என ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவித்துள்ளார்.

A1TamilNews.com

From around the web