வேலூர் தேர்தல்… திமுக வெற்றி… சொற்ப வாக்குகளில் தோற்றார் ஏசி சண்மும்!

வேலூர்: வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் கடந்த 5-ந் தேதி நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. சார்பில் ஏ.சி.சண்முகமும், தி.மு.க. சார்பில் கதிர்ஆனந்தும், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமியும் இவர்கள் உள்பட 28 பேர் போட்டியிட்டனர். ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்றது. தபால் வாக்குகள் எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளர் ஏ.சி சண்முகம் முன்னிலை பெற்று இருந்தார். முதல்
 

வேலூர் தேர்தல்… திமுக வெற்றி… சொற்ப வாக்குகளில் தோற்றார் ஏசி சண்மும்!வேலூர்: வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் கடந்த 5-ந் தேதி நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. சார்பில் ஏ.சி.சண்முகமும், தி.மு.க. சார்பில் கதிர்ஆனந்தும், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமியும் இவர்கள் உள்பட 28 பேர் போட்டியிட்டனர்.

ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்றது. தபால் வாக்குகள் எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளர் ஏ.சி சண்முகம் முன்னிலை பெற்று இருந்தார்.

முதல் மூன்று சுற்றுகளில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை பெற்றார். அதன் பிறகு 11வது சுற்றுவரை அதிமுக வேட்பாளர் ஏசி சண்முகம் முன்னிலையில் இருந்தார். 12வது சுற்றுக்குப் பிறகு திமுக வேட்பாளர் மீண்டும் முன்னிலைக்கு வந்தார். அதன்பிறகு இறுதிச் சுற்றுவரை 7 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார்.

15687 வாக்குகள் எண்ணப்படவிருந்த நிலையில் திமுக வேட்பாளர் 8460 வாக்குகள் முன்னிலைப் பெற்றிருந்ததால், திமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது. இதைத் தொடர்ந்து திமுக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் உற்சாகமாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

திமுக 485340
அதிமுக 477199
நாம் தமிழர் 26995

வாக்குகள் வெற்றி வித்தியாசம் 8141

 

From around the web