நீட்  விலக்க மசோதா நிராகரிப்பை எதிர்த்து திமுக வெளிநடப்பு .. மக்களவை ஒத்திவைப்பு!

டெல்லி: நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நீட் மசோதாவை நிராகரித்த மத்திய அரசை கண்டித்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். மக்களவையில் பேசிய டி.ஆர்.பாலு 27 மாதங்களாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இரு மசோதாக்களை கிடப்பில் போட்டு விட்டு, நிராகரிக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் கூறியுள்ளது மத்திய அரசு. தமிழ்நாட்டை மத்திய அரசு ஆள்கிறதா என்று கேள்வி எழுப்பினார் டி.ஆர்.பாலு. மேலும், நீட் தேர்வு சிபிஎஸ்ஐ பாடத்திட்டத்தில் இருப்பதால் மாநிலக்கல்வித் திட்டத்தில் படிக்கும் மாணவிகளால் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை. மருத்துவர் கனவு கொண்ட
 
நீட்  விலக்க மசோதா நிராகரிப்பை எதிர்த்து திமுக வெளிநடப்பு .. மக்களவை ஒத்திவைப்பு!

டெல்லி: நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நீட் மசோதாவை நிராகரித்த மத்திய அரசை கண்டித்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

மக்களவையில் பேசிய டி.ஆர்.பாலு 27 மாதங்களாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இரு மசோதாக்களை கிடப்பில் போட்டு விட்டு, நிராகரிக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் கூறியுள்ளது மத்திய அரசு.  தமிழ்நாட்டை மத்திய அரசு ஆள்கிறதா என்று கேள்வி எழுப்பினார் டி.ஆர்.பாலு.

மேலும், நீட் தேர்வு சிபிஎஸ்ஐ பாடத்திட்டத்தில் இருப்பதால் மாநிலக்கல்வித் திட்டத்தில் படிக்கும் மாணவிகளால் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை. மருத்துவர் கனவு கொண்ட இளம் பெண்கள் நீட் தேர்வு தோல்வியால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டனர். தமிழ்நாடு மசோதாக்கள் நிராகரிக்கப் பட்டதற்கு அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று டி.ஆர்.பாலு பேசினார். 

அரசுத் தரப்பில் விளக்கம் தரப்படாததால் மக்களவையிலிருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

மாநிலங்களவையில் பேசிய திருச்சி சிவா, கூட்டாட்சி தத்துவத்திற்கு முற்றிலும் எதிரான நடவடிக்கை இது.  மாநிலங்களின் முடிவுகளை நிராகரிப்பது ஏற்புடையது அல்ல என்று கூறினார். மாநிலங்களவையிலும் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

நேற்றைய ஒரு நாள் வெளிநடப்புடன் நீட் விவகாரத்தை திமுகவினர் விடப்போவதில்லை எனத் தெரிகிறது. நீட் விவகாரத்தில் அமளியும், வெளிநடப்பும் தொடர்ந்து இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

– வணக்கம் இந்தியா 

 
 
 
 

From around the web