உள்ளாட்சித் தேர்தலுக்கு ஆயத்தமாகும் திமுக! விருப்பமனு அளிக்கும் தேதி அறிவிப்பு!!

உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் வரும் 14ஆம் தேதி முதல் விருப்பமனுக்களை அளிக்கலாம் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதிமுகவைத் தொடர்ந்து, திமுகவும் விருப்பமனுக்களை அளிக்கலாம் என அறிவித்துள்ளதால், உள்ளாட்சித் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. திமுக பொதுக்குழு கூட்டத்தைத்தொடர்ந்து, அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கும் வகையில், அனைத்து மாவட்டங்களிலும் வரும்16ம் தேதி பொதுக்கூட்டங்களை நடத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாகவும், திமுக
 

உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் வரும் 14ஆம் தேதி முதல் விருப்பமனுக்களை அளிக்கலாம் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதிமுகவைத் தொடர்ந்து, திமுகவும் விருப்பமனுக்களை அளிக்கலாம் என அறிவித்துள்ளதால், உள்ளாட்சித் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

திமுக பொதுக்குழு கூட்டத்தைத்தொடர்ந்து, அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கும் வகையில், அனைத்து மாவட்டங்களிலும் வரும்16ம் தேதி பொதுக்கூட்டங்களை நடத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாகவும், திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் வரும் 14ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை விருப்பமனுக்களை அளிக்கலாம் என ஸ்டாலின் தெரிவித்தார்.‌ மேயர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் 50 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி விருப்ப மனுவை பெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நகராட்சி தலைவர் பதவிக்கான விருப்பமனு கட்டணம் 25 ஆயிரம் ரூபாய் எனவும், பேரூராட்சி தலைவர் பதவிக்கான விருப்பமனு கட்டணம் 10 ஆயிரம் ரூபாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட 5 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி விருப்பமனுவை பெறலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

https://www.A1TamilNews.com

From around the web