கொரோனா தொற்று ஏற்பட்ட திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம்!

கொரோனா தொற்று ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக எம்.எல்.ஏ அன்பழகனின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தகவல் தெரிவிகிறது. ஒன்றிணைவோம் வா திட்டத்திற்காக பரபரப்பாக நிவாரணப் பொருட்களை பொதுமக்களுக்கு வினியோகம் செய்து வந்த ஜெ.அன்பழகன் இரண்டு நாட்களாக காய்ச்சல் என்று வீட்டிலேயே தனிமையில் இருந்தவர் பின்னர் சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே சில உடல் உபாதைகளுக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டவர் என்பதால், கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாக
 

கொரோனா தொற்று ஏற்பட்ட திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம்!கொரோனா தொற்று ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக எம்.எல்.ஏ அன்பழகனின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தகவல் தெரிவிகிறது.

ஒன்றிணைவோம் வா திட்டத்திற்காக பரபரப்பாக நிவாரணப் பொருட்களை பொதுமக்களுக்கு வினியோகம் செய்து வந்த ஜெ.அன்பழகன் இரண்டு நாட்களாக காய்ச்சல் என்று வீட்டிலேயே தனிமையில் இருந்தவர் பின்னர் சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஏற்கனவே  சில உடல் உபாதைகளுக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டவர் என்பதால், கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. வென்டிலேட்டர் மூலம் 80 சதவீத ஆக்சிஜன் வழங்கப்பட்டு வந்துள்ளது.

இன்று வெளியாகியுள்ள மருத்துவமனை அறிக்கையில், தற்போது 67 சதவீதம் ஆக்சிஜன் மட்டுமே வென் டிலேட்டர் மூலம் செலுத்தப்படுகிறது,அன்பழகனின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.

பணிசெய்யும் இடத்தில் தொற்று ஏற்பட்டு கொரோனாவிலிருந்து மீண்ட துபாய் தமிழர் , 12 நாட்கள் நோய்வாய்ப்பட்டிருந்ததாகவும் கடைசி 3 நாட்கள் தான் ஆக்சிஜன் அளவு குறைகிறது, 94 என்ற அளவீட்டிற்குச் செல்லும் போது வென்டிலேட்டர் தேவைப்படுவதாகவும் தெரிவித்து இருந்தார்.

அந்த அடிப்படையில் பார்த்தால், ஜெ.அன்பழகன் இன்னும் ஒரிரு நாட்களில் கொரோனா தொற்று குறைந்து முழுவதுமாக நலம் அடையக்கூடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

A1TamilNews.com

From around the web