சட்டப்பேரவை கூட்டத்தை வெளிநடப்பு செய்த திமுக – காங் கூட்டணி கட்சிகள்!

2020ம் ஆண்டின் தமிழக சட்டப்பேரவை முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. கூட்டத்தொடரில் கலந்து கொண்ட திமுக, காங்கிரஸ், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்துள்ளனர். குடியுரிமை சட்ட உரிமை குறித்து பேச அனுமதி கேட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டதால், அவையை புறக்கணித்து மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். வெளிநடப்பு செய்த பின்னர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசினார். “ஏழு பேர் விடுதலைக்கான மனு
 

சட்டப்பேரவை கூட்டத்தை வெளிநடப்பு செய்த திமுக – காங் கூட்டணி கட்சிகள்!2020ம் ஆண்டின் தமிழக சட்டப்பேரவை முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. கூட்டத்தொடரில் கலந்து கொண்ட திமுக, காங்கிரஸ், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்துள்ளனர்.

குடியுரிமை சட்ட உரிமை குறித்து பேச அனுமதி கேட்டு திமுக  தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டதால், அவையை புறக்கணித்து மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

வெளிநடப்பு செய்த பின்னர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசினார்.

சட்டப்பேரவை கூட்டத்தை வெளிநடப்பு செய்த திமுக – காங் கூட்டணி கட்சிகள்!

“ஏழு பேர் விடுதலைக்கான மனு இந்த ஆளுநரிடம் எந்த முடிவும் இல்லாமல் இருக்கிறது. குடியுரிமைச் சட்டத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அந்த சட்ட மசோதாவுக்கு அதிமுக ஆதரவு தெரிவித்து வாக்களித்துள்ளனர். நீட் தேர்வு விலக்கு குறித்து அவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீது உரிய நடவடிக்கை இல்லாமல் கண் துடைப்பு நாடகம் நடத்துகிறார்கள்,” என்று குற்றம் சாட்டினார் மு.க.ஸ்டாலின்.

திமுகவினரைத் தொடர்ந்து காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ வெளிநடப்பு செய்துள்ளனர். 

https://www.A1TamilNews.com

From around the web