தேமுதிக தப்புமா? உள்ளாட்சித் தேர்தலில்!

தமிழ் நாட்டில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 27, 30-ம் தேதிகளில் 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கி உள்ளது. தேமுதிக தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தலைமையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா, துணைச் செயலாளர்கள் எல்.கே.சுதீஷ் மற்றும் 65 மாவட்டச் செயலாளர்கள் முன்னிலையில் கோயம்பேட்டில் நேற்று நடைபெற்றது. வெற்றி வாய்ப்புள்ள இடங்கள், வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பல்வேறு
 

தேமுதிக தப்புமா? உள்ளாட்சித் தேர்தலில்!

மிழ் நாட்டில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 27, 30-ம் தேதிகளில் 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கி உள்ளது.

தேமுதிக தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தலைமையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா, துணைச் செயலாளர்கள் எல்.கே.சுதீஷ் மற்றும் 65 மாவட்டச் செயலாளர்கள் முன்னிலையில் கோயம்பேட்டில் நேற்று நடைபெற்றது.

வெற்றி வாய்ப்புள்ள இடங்கள், வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்த விவாதங்கள் முடிவுகள் எடுக்கப்பட்டன.அதன் பிறகு , மாவட்ட வாரியாக செயலாளர்களுடன் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

‘தேமுதிகவை வலுப்படுத்தும் வகையில் உள்ளாட்சித் தேர்தலில் சிறப்பாக பணியாற்ற வேண்டும். தேமுதிகவுக்கு சாதகமாகவும், அதிக வெற்றி வாய்ப்புள்ள இடங்களின் பட்டியலும் வழங்கப்பட்டுள்ளது. இதை அடிப்படையாக கொண்டு அதிமுகவிடம் சாதகமான இடங்கள் குறித்தும், தொகுதிப் பங்கீடு குறித்தும் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தேமுதிக மூத்த தலைவர்கள் கூறியுள்ளனர்.

https://www.A1TamilNews.com

From around the web