தமிழகத்தில்  மழை வெளுத்து வாங்கப் போகும் 8 மாவட்டங்கள்!வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கோவை, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர்,
 

தமிழகத்தில்  மழை வெளுத்து வாங்கப் போகும் 8 மாவட்டங்கள்!வானிலை ஆய்வு மையம்!தமிழகத்தில் 8 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில்  தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.  தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக  தமிழகத்தில் கோவை, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

சென்னை, திருவள்ளூர், வேலூர், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, மாவட்டங்களில்  வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நீலகிரியில்  கனமழை பெய்யக்கூடும்.

மத்திய மேற்கு வங்கக்கடல்  மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால  மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க  செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

A1TamilNews.com

From around the web