சாத்தான்குளம் சம்பவம்! போலீஸ் படங்களாக இயக்கிய ஹரி வேதனை!

சமீபகால தமிழ்த் திரையுலகில் வெற்றி பெற்ற போலீஸ் படங்களை இயக்கியவர்களில் முக்கியமானவர் இயக்குனர் ஹரி. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களின் பின்னணியில் ஹரி இயக்கிய சாமி, சாமி ஸ்கொயர், சிங்கம், சிங்கம்2 மற்றும் சிங்கம் 3 படங்கள் பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பியது. சூர்யாவின் சிங்கம் மீசை மிகவும் பாப்புலரானது. சாமி, சிங்கம் இரண்டு படங்களிலும் நெல்லை வட்டார மொழியுடன், அந்தந்த ஊர்களின் பின்னணி, மக்களின் அன்றாட வாழ்கை, மண்வாசனையை மிகவும் நேர்த்தியாக திரையில் கொண்டுவந்திருப்பார் ஹரி. சாமியில்
 

சாத்தான்குளம் சம்பவம்! போலீஸ் படங்களாக இயக்கிய ஹரி வேதனை!சமீபகால தமிழ்த் திரையுலகில் வெற்றி பெற்ற போலீஸ் படங்களை இயக்கியவர்களில் முக்கியமானவர் இயக்குனர் ஹரி. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களின் பின்னணியில் ஹரி இயக்கிய சாமி, சாமி ஸ்கொயர், சிங்கம், சிங்கம்2 மற்றும்  சிங்கம் 3 படங்கள் பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பியது.

சூர்யாவின் சிங்கம் மீசை மிகவும் பாப்புலரானது. சாமி, சிங்கம் இரண்டு படங்களிலும் நெல்லை வட்டார மொழியுடன், அந்தந்த ஊர்களின் பின்னணி, மக்களின் அன்றாட வாழ்கை, மண்வாசனையை மிகவும் நேர்த்தியாக திரையில் கொண்டுவந்திருப்பார் ஹரி.

சாமியில் நான் போலீஸ் இல்லை பொறுக்கி என்று விக்ரம் பேசும் வசனம் இருந்தாலும், வில்லன்களிடம் தான் அப்படி இருப்பார். ஆனால் பொதுமக்களுக்கு அரணாகத்தான் இருப்பார் சாமி.

சிங்கம் படத்தில் வரும் துரைசிங்கம் போல் ஒரு போலீஸ் அதிகாரி கிடைக்க மாட்டாரா என்ற ஏக்கம் ஒவ்வொருவருக்கும் வரும் அளவுக்கு அந்த பாத்திரத்தை உருவாக்கியிருப்பார் ஹரி. துரை சிங்கம் கேரக்டருக்கு மக்கள் அளித்த வரவேற்பு தான், அதன் தொடர்ச்சியாக மூன்று பாகங்கள் எடுக்க காரணமாக இருந்தது.

சாத்தான்குளம் சம்பவம்! போலீஸ் படங்களாக இயக்கிய ஹரி வேதனை!

துரை சிங்கம் போன்ற நேர்மையான காவல்துறை அதிகாரிகளையும் தென்மாவட்ட மக்கள் பார்த்துள்ளார்கள் என்பதுவும் உண்மையே!. சாத்தான்குளம் சம்பவத்தைத் தொடர்ந்து ஹரி தன்னுடைய வேதனையை அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.

”சாத்தான்குளம் சம்பவம் ஜெயராஜ் பெனிக்ஸ் உயிரிழப்பு போல் இனி ஒரு கொடூரம் தமிழக மக்களுக்கு நடந்துவிடக்கூடாது. அதற்கு ஒரே வழி சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவருக்கும் அதிகபட்ச தண்டனை வழங்குவதே.

காவல்துறையில் உள்ள சிலரின் இந்த அத்துமீறல் அந்த துறையையே இன்று களங்கப்படுதியுள்ளது. காவல் துறையை பெருமைப்படுத்தி ஐந்து படம் எடுத்ததற்காக இன்று மிக மிக வேதனைப்படுகிறேன்,” என்று அறிக்கையில் கூறியுள்ளார் ஹரி.

 

சாத்தான்குளத்திற்கு அருகே தான் ஹரியின் சொந்த ஊரும் என்பது குறிப்பிடத் தக்கது.

A1TamilNews.com

From around the web