திமுகவுக்கும் அதிமுகவுக்கும் என்ன தான் வித்தியாசம்?

திமுக நாங்கள் பெரியார், அண்ணாவின் வழிவந்த கட்சி என்று சொன்னால்.. நாங்களும் அப்படிதான் என்று சொல்லும் அதிமுக. திமுக நாங்கள் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான கட்சி என்று சொன்னால்.. நாங்களும் அப்படிதான் என்று செல்லும் அதிமுக. திமுக நாங்கள் ஈழத்தமிழர் நலனில் அக்கறை கொண்ட கட்சி என்று சொன்னால்.. நாங்களும் அப்படிதான் என்று சொல்லும் அதிமுக. திமுக நாங்கள் இஸ்லாமிய, சிறுபான்மை சமூக நலனில் அக்கறை கொண்ட கட்சி என்று சொன்னால்.. நாங்களும் அப்படிதான் என்று சொல்லும்
 

திமுகவுக்கும் அதிமுகவுக்கும் என்ன தான் வித்தியாசம்?திமுக நாங்கள் பெரியார், அண்ணாவின் வழிவந்த கட்சி என்று சொன்னால்.. நாங்களும் அப்படிதான் என்று சொல்லும் அதிமுக.

திமுக நாங்கள் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான கட்சி என்று சொன்னால்.. நாங்களும் அப்படிதான் என்று செல்லும் அதிமுக.

திமுக நாங்கள் ஈழத்தமிழர் நலனில் அக்கறை கொண்ட கட்சி என்று சொன்னால்.. நாங்களும் அப்படிதான் என்று சொல்லும் அதிமுக.

திமுக நாங்கள் இஸ்லாமிய, சிறுபான்மை சமூக நலனில் அக்கறை கொண்ட கட்சி என்று சொன்னால்.. நாங்களும் அப்படிதான் என்று சொல்லும் அதிமுக.

திமுக நாங்கள் இரு மொழிக்கொள்கையை ஆதரிக்கிறோம், மும்மொழி கொள்கையை எதிர்க்கிறோம் என்றால்.. நாங்களும் அப்படிதான் என்று சொல்லும் அதிமுக.

திமுக நாங்கள் 69% இடஒதுக்கீடு கொள்கையை பாதுகாப்போம் என்றால்.. நாங்களும் அப்படிதான் என்று சொல்லும் அதிமுக.

திமுக நாங்கள் பார்ப்பனியத்துக்கு எதிரான கட்சி, இந்துத்துவத்திற்கு எதிரான கட்சி, மனுதர்மத்திற்கு எதிரான கட்சி என்று சொன்னால்.. நாங்களும் அப்படிதான் என்று சொல்ல முடியாது அதிமுகவால்.. தப பப தபதபத தத என்று முழிக்கும்.

இதுதான் அதிமுகவிலிருந்து திமுகவை தனித்துவத்துடன் வேறுபடுத்திக் காட்டும் அம்சம். இதுதான் திமுகவின் அடி நாதம். இது தொடர்ந்தால் தான் திமுக ‘திமுக’வாகவே நிலைக்கும்.

இதில் சமரசம் செய்யத் துவங்கினால், இதிலிருந்து விலக துவங்கினால் திமுக தன் தனித்தன்மையை, தனது அடி நாதத்தை மெல்ல மெல்ல இழக்கிறது என்று அர்த்தம்.

– கோபிநாத் குபேந்திரன்

A1TamilNews.com

From around the web