அகதிகளின் கால்களைச் சுடுங்கள்! ட்ரம்பின் புதிய சர்ச்சை

வாஷிங்டன்: எல்லைகளில் ஊடுருவல்களை தடுக்க முதலைகள் நிறைந்த அகழிகளை தோண்டி வைக்க தான் யோசனை தெரிவித்ததாக வெளியான தகவலை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மறுத்துள்ளார். 2017ம் ஆண்டு அதிபராக பதவியேற்றது முதலே, குடியேற்றக் கொள்கைகளை ட்ரம்ப் கடுமையாக்கி வருகிறார். மெக்சிகோ எல்லை வழியே அகதிகள் நுழைவதை தடுக்க சுவர் கட்டுவதற்கான பணிகளையும் முடுக்கி விட்டுள்ளார். இந்த நிலையில் எல்லை வழியே நுழையும் அகதிகளை காலில் சுட வேண்டும் என ட்ரம்ப் யோசனை தெரிவித்ததாக நியூயார்க் டைம்ஸில் செய்தி வெளியானது.
 

அகதிகளின் கால்களைச் சுடுங்கள்! ட்ரம்பின் புதிய சர்ச்சை

வாஷிங்டன்: எல்லைகளில் ஊடுருவல்களை தடுக்க முதலைகள் நிறைந்த அகழிகளை தோண்டி வைக்க தான் யோசனை தெரிவித்ததாக வெளியான தகவலை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மறுத்துள்ளார்.

2017ம் ஆண்டு அதிபராக பதவியேற்றது முதலே, குடியேற்றக் கொள்கைகளை ட்ரம்ப் கடுமையாக்கி வருகிறார். மெக்சிகோ எல்லை வழியே அகதிகள் நுழைவதை தடுக்க சுவர் கட்டுவதற்கான பணிகளையும் முடுக்கி விட்டுள்ளார். இந்த நிலையில் எல்லை வழியே நுழையும் அகதிகளை காலில் சுட வேண்டும் என ட்ரம்ப் யோசனை தெரிவித்ததாக நியூயார்க் டைம்ஸில் செய்தி வெளியானது.

ஊடுருவல்களை தடுக்க எல்லையில் முதலை‌கள், பாம்புகள் நிறைந்த அகழிகளை தோண்டி வைக்க வேண்டும் என்றும் அவர் கூறியதாகவும் செய்தி வெளியானது. வெள்ளை மாளிகையில் நெருக்கமான அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனையின் போது இந்த யோசனைகளைக் கேட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த தகவல் பொய்யானவை என மறுத்துள்ள ட்ரம்ப், தான் அப்படி கூறவில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

 

From around the web