வாழைக்கு தண்ணீர் திறக்க தமிழிசை வாக்குறுதி.. எடப்பாடி அரசு மறுப்பு?

தூத்துக்குடி: வாழைக்கு தண்ணீர் திறந்து விடுவதாக விவசாயிகளுக்கு தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாததால், உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தயாராகி வருகிறார்கள். தூத்துக்குடி தொகுதியில் வாழை முக்கியமான பயிர் என்பதால், குறைந்த பட்ச விலை நிர்ணயிக்கப்படும், குளிர்பதன கிட்டங்கி அமைக்கப்பமிடும் என்று தொகுதிக்கான தேர்தல் அறிக்கையில் தமிழிசை சௌந்தரராஜன் உறுதியளித்துள்ளார். இந்நிலையில், கோரம்பள்ளம், அத்திமரப்பட்டி, குலையன்கரிசல், கூட்டாம்புளி, சேர்வைகாரன்மடம் விவசாய சங்கத்தினர் வாழை பயிருக்கு தண்ணீர் திறந்து விடுமாறு பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஸ்ரீவைகுண்டம்
 

வாழைக்கு தண்ணீர் திறக்க  தமிழிசை வாக்குறுதி..  எடப்பாடி அரசு மறுப்பு?தூத்துக்குடி: வாழைக்கு தண்ணீர் திறந்து விடுவதாக விவசாயிகளுக்கு தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாததால், உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தயாராகி வருகிறார்கள்.

தூத்துக்குடி தொகுதியில் வாழை முக்கியமான பயிர் என்பதால், குறைந்த பட்ச விலை நிர்ணயிக்கப்படும், குளிர்பதன கிட்டங்கி அமைக்கப்பமிடும் என்று தொகுதிக்கான தேர்தல் அறிக்கையில் தமிழிசை சௌந்தரராஜன் உறுதியளித்துள்ளார்.

இந்நிலையில், கோரம்பள்ளம், அத்திமரப்பட்டி, குலையன்கரிசல், கூட்டாம்புளி, சேர்வைகாரன்மடம் விவசாய சங்கத்தினர் வாழை பயிருக்கு தண்ணீர் திறந்து விடுமாறு பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஸ்ரீவைகுண்டம் அணையில் 92 அடி இருந்த நிலையிலும் ஏதேதோ சாக்கு போக்கு சொல்லியுள்ளனர்.

அதே நேரத்தில் வாக்கு சேகரிக்க தமிழிசை குலையன்கரிசல் கிராமத்திற்கு வந்துள்ளார். அவரிடமும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். உடனடியாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் பேசி தண்ணீர் திறந்து விட ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்துள்ளார்.

10 நாட்கள் கடந்த பின்னரும் தண்ணீர் திறந்துவிடப்படவில்லை என்று விவசாயிகள் சேர்வைகாரன் மடம், கூட்டாம்புளி, குலையன்கரிசல், அத்திமரப்பட்டி, கோரம்பள்ளம் கிராமங்களைச் சார்ந்த விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அங்கு வந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் 78 அடி தண்ணீர் தான் இருக்கிறது. குடி தண்ணீர் தேவைக்கு வேண்டும் என்று மறுத்து விட்டனர்.

குடிதண்ணீர் என்ற பெயரில் தொழிற்சாலைக்கு தண்ணீர் தருவதற்காக, விவசாயப் பாசனத்திற்குட் தண்ணீர் தர மறுக்கிறார்கள் என்று விவசாயிகள் தரப்பில் கூறுகிறார்கள். அணையில் தண்ணீர் குறைவாக இருந்தால் தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் நிறுத்த்தப்படுவது வழக்கம்.

ஆனால், தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் கொடுத்து விட்டு விவசாயிகளுக்கு மறுக்கப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டுகிறார்கள். அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்தற்கு காரணம் தொழிற்சாலைகளுக்கு தரப்பட்டதுதான் காரணமே ஒழிய குடிதண்ணீர் அல்ல என்றும் கூறுகிறார்கள்.

முதல்வர் உத்தரவிட்டால் அடுத்த நிமிடமே அதிகாரிகள் தண்ணீர் திறந்து விடுவார்களே. விவசாயிகளிடம் கொடுத்த வாக்குறுதியின் படி, தமிழிசை முதல்வரிடம் கேட்டாரா? அல்லது தமிழிசையின் கோரிக்கையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிராகரித்தாரா? என்றும் விவசாயிகள் கேள்வி எழுப்புகிறார்கள்.

வாழைத் தோட்டங்கள் பூவும் பிஞ்சுவுமாக இருக்கும் இந்த நேரத்தில் தண்ணீர் திறந்து விட மறுத்தால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் வாழைப்பயிர் கருகும் என்றும் விவசாயிகள் கலங்கிப் போய் உள்ளார்கள். அடுத்த சில நாட்களுக்குள் தண்ணீர் தராவிட்டால் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக விவசாயிகள் கூறுகிறார்கள்.

விவசாயிகள் கோரிக்கையை முதல்வரிடம் தமிழிசை வலியுறுத்தினாரா? அல்லது முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழிசையின் கோரிக்கையை நிராகரித்து விட்டாரா? என்பதே விவசாயிகளின் முதல் கேள்வியாக உள்ளது.

பூவும் பிஞ்சுமாக வாழைப்பயிருக்கு தண்ணீர் திறந்து விட முடியாத தமிழிசை, வாழைக்கு குறைந்த பட்ச விலையும் குளிர்பதன கிட்டங்கியும் எப்படி அமைத்துத் தரப்போகிறார் என்றும் விவசாயிகள் கேட்கிறார்கள்.

– வணக்கம் இந்தியா

From around the web