‘தல’ டோணி அபாரம்… சென்னை சூப்பர் கிங்சுக்கு மூன்றாவது வெற்றி!

சென்னை: சேப்பாக்கம் எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கான இடையேயான 12-வது லீக் போட்டி இன்று நடந்தது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து சென்னை அணியின் சார்பில் அம்பத்தி ராயுடு, ஷேன் வாட்சன் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். அதில் ராயுடு 1 (8) ரன்னிலும், வாட்சன் 13 (13) ரன்னிலும், கேதர் ஜாதவ் 8 (3) ரன்னிலும் அடுத்தடுத்து
 

சென்னை: சேப்பாக்கம் எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கான இடையேயான 12-வது லீக் போட்டி இன்று நடந்தது.

டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து சென்னை அணியின் சார்பில்  அம்பத்தி ராயுடு, ஷேன் வாட்சன் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். அதில் ராயுடு 1 (8) ரன்னிலும், வாட்சன் 13 (13) ரன்னிலும், கேதர் ஜாதவ் 8 (3) ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்ததாக சுரேஷ் ரெய்னாவும், கேப்டன் டோனியும் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடியின் நிதானமான ஆட்டத்தால் அணியின் ரன் ரேட் மெதுவாக உயர்ந்தது. அதில் ரெய்னா 36(32) ரன்களில் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய பிராவோ 27 (16) ரன்களில் கேட்ச் ஆனார்.

நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய டோனி தனது அரை சதத்தைக் கடந்த பின்னர், அதிரடி ஆட்டத்துக்குத் திரும்பினார். கடைசி மூன்று ஓவர்களில் மட்டும் 45 ரன்களை விளாசினர் டோணி – பிராவோ – ஜடேஜா கூட்டணி.
 
இறுதியில் டோனி 75 (46) ரன்களும், ஜடேஜா 8 (3) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணியின் சார்பில் அதிகபட்சமாக ஆர்சர் 2 விக்கெட்டுகளும், ஸ்டோக்ஸ், குல்கர்னி, உனட்கட் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் ராஜஸ்தான் அணிக்கு 176 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

ராஜஸ்தான் அணி எடுத்த எடுப்பிலேயே 3 விக்கெடுகளை இழந்தது.

பென் ஸ்டோக்ஸ் 46 ரன்களும், திரிபாதி 39 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 28 ரன்கள் எடுத்தாலும், இம்ரான் தாஹிர், பிராவோ, தாகுர் மற்றும் சாஹர் ஆகியோரின் பந்து வீச்சில் வரிசையாக விக்கெடுகளை இழந்தது.

கடைசி ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது. இறுதி ஓவரை வேகப்பந்து வீச்சாளர் வெய்ன் பிராவோ வீசினார். முதல் பந்தில் பென் ஸ்டோக்ஸ் (46 ரன், 26 பந்து, ஒரு பவுண்டரி, 3 சிக்சர்) ஓங்கி அடித்த பந்தை ரெய்னா சூப்பராக கேட்ச் செய்ய, ரசிகர்களின் ஆர்ப்பரிப்பால் அரங்கமே அதிர்ந்தது. எஞ்சிய 5 பந்துகளில் பிராவோ மேலும் ஒரு விக்கெட்டை காலி செய்ததோடு, 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து வெற்றியை உறுதி செய்தார்.

ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 167 ரன்களே எடுத்தது. இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 ரன் வித்தியாசத்தில் தொடர்ந்து 3-வது வெற்றியை (ஹாட்ரிக்) பதிவு செய்தது.

தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், பிராவோ, இம்ரான் தாஹிர் தலா 2 விக்கெட்டுகளைச் சாய்த்தனர். ராஜஸ்தான் அணிக்கு இது 3-வது தோல்வியாகும்.

இன்றைய ஆட்டம்:

கிங்ஸ் லெவன் பஞ்சாப் vs டெல்லி கேப்பிடல்ஸ், மொஹாலி, இரவு 8 மணி.

– வணக்கம் இந்தியா

From around the web