‘டோணி இல்லாத இந்திய அணியா…. உலகக் கோப்பை தொடரில் அவர்தான் அணியை வழிநடத்துவார்!’ – பிசிசிஐ

டெல்லி: உலகமே ஆர்வத்துடன் எதிர்ப்பார்க்கும் கிரிக்கெட் திருவிழா உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இந்தப் போட்டி, இந்த முறை இங்கிலாந்தில் நடக்கிறது. வரும் மே 30–ந்தேதி முதல் ஜூலை 14–ந்தேதி வரை நடக்கும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் பட்டியல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்தப் பட்டியலில் 37 வயதாகும் இந்திய வீரர் டோணி இடம் பெறுவாரா என்ற கேள்வியை தலைமைத் தேர்வாளர் எம்எஸ்கே பிரசாத்திடம்
 

‘டோணி இல்லாத இந்திய அணியா…. உலகக் கோப்பை தொடரில் அவர்தான் அணியை வழிநடத்துவார்!’ – பிசிசிஐ

டெல்லி: உலகமே ஆர்வத்துடன் எதிர்ப்பார்க்கும் கிரிக்கெட் திருவிழா உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இந்தப் போட்டி, இந்த முறை இங்கிலாந்தில் நடக்கிறது.

வரும் மே 30–ந்தேதி முதல் ஜூலை 14–ந்தேதி வரை நடக்கும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் பட்டியல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்தப் பட்டியலில் 37 வயதாகும் இந்திய வீரர் டோணி இடம் பெறுவாரா என்ற கேள்வியை தலைமைத் தேர்வாளர் எம்எஸ்கே பிரசாத்திடம் கேட்டபோது, “அதிலென்ன சந்தேகம்… இங்கிலாந்தில் நடக்கும் உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடும் இந்திய அணியில் முக்கிய வீரராக டோணி இருப்பார். அவர்தான் அணிக்கு தேவையான ஆலோசனைகளைச் சொல்லி வீரர்களை வழிநடத்துவார். கேப்டன் விராட் கோஹ்லிக்கும் நல்ல ஆலோசகராக இருப்பார்.

கடந்த இரு தொடர்களிலும் டோணி விளையாடிய விதம் அற்புதமாக இருந்தது. அவர் தனது பழைய ஆக்ரோஷமான, அதே நேரம் பக்குவமான நிலைக்குத் திரும்பிவிட்டார்.

மேலும் வரவிருக்கும் ஐபிஎல்லிலும் அவர் விளையாடுவது, உலகக் கோப்பை போட்டிக்கு முந்தைய நல்ல பயிற்சியாக அமையும்,” என்றார்.

 

From around the web