யோகி பாபு வுக்கு தங்கச் செயின் வழங்கிய தனுஷ்!

முன்னணி காமெடி நடிகராக தமிழ் சினிமாவை கலக்கிவரும் யோகி பாபுவுக்கு நடிகர் தனுஷ் தங்கச் செயின் வழங்கியுள்ளார். தமிழ் சினிமாவில் தற்போது மிகவும் பிஸியாக இருப்பவர் யோகி பாபு. அவருடைய கால்ஷீட்டுக்காக முன்னணி ஹீரோக்களும் காத்திருக்கிறார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் தர்பார் படத்திலும் நடித்து இருந்தார். அந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவின் போது வரும் தை மாதம் யோகி பாபு வுக்கு திருமணம் நடக்கும் என்று ரஜினிகாந்த் கூறியிருந்தார். அவர் சொன்னது போலவே யோகிபாபு வுக்கு
 

யோகி பாபு வுக்கு தங்கச் செயின் வழங்கிய தனுஷ்!முன்னணி காமெடி நடிகராக தமிழ் சினிமாவை கலக்கிவரும் யோகி பாபுவுக்கு நடிகர் தனுஷ் தங்கச் செயின் வழங்கியுள்ளார்.

தமிழ் சினிமாவில் தற்போது மிகவும் பிஸியாக இருப்பவர் யோகி பாபு. அவருடைய கால்ஷீட்டுக்காக முன்னணி ஹீரோக்களும் காத்திருக்கிறார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் தர்பார் படத்திலும் நடித்து இருந்தார்.

அந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவின் போது வரும் தை மாதம் யோகி பாபு வுக்கு திருமணம் நடக்கும் என்று ரஜினிகாந்த் கூறியிருந்தார். அவர் சொன்னது போலவே யோகிபாபு வுக்கு சில நாட்களுக்கு முன்னர் சொந்த ஊரில் திருமணம் நடைபெற்றது. விரைவில் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

திருமணம் ஆன உடனேயே மீண்டும் படப்பிடிப்பில் கலந்து வருகிறார் யோகி பாபு. தனுஷ் நடிக்கும் கர்ணன் படப்பிடிப்பில் பங்கேற்ற போது, யோகி பாபு வுக்கு, தனுஷ் தங்கச் செயினை திருமண அன்பளிப்பாக அணிவித்தார்.

https://www.A1TamilNews.com

From around the web