திருச்செந்தூரு முருகா, உன்னை பார்க்க அனுமதியில்லையே! பக்தர்கள் பரிதவிப்பு!!

திருச்செந்தூர் உள்பட முருகப்பெருமானின் கோயில்களில் நடைபெறும் வைகாசி விசாகத்தில் பங்கேற்க பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று இந்து அறநிலையத் துறை அறிவித்துள்ளது. திருச்செந்தூரில் வைகாசி விசாகம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒரு சப்பரத்தில் முருகப்பெருமான் திருவுலா வரும் காட்சியைக் காண ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூடுவார்கள். கொரோனா ஊரடங்கு தளர்த்தப் பட்டாலும், கோயில்களுக்குள் பக்தர்கள் செல்வதற்கு இன்னும் அனுமதி தரப்படவில்லை. அனைத்து கோயில்களிலும் வழிபாடுகளும், ஆராதனைகளும் வழக்கம் போல் நடைபெற்று வருகிறது. திருவிழாக்கால
 

திருச்செந்தூரு முருகா, உன்னை பார்க்க அனுமதியில்லையே! பக்தர்கள் பரிதவிப்பு!!திருச்செந்தூர் உள்பட முருகப்பெருமானின் கோயில்களில் நடைபெறும் வைகாசி விசாகத்தில் பங்கேற்க பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று இந்து அறநிலையத் துறை அறிவித்துள்ளது.

திருச்செந்தூரில் வைகாசி விசாகம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒரு சப்பரத்தில் முருகப்பெருமான் திருவுலா வரும் காட்சியைக் காண ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூடுவார்கள்.

கொரோனா ஊரடங்கு தளர்த்தப் பட்டாலும், கோயில்களுக்குள் பக்தர்கள் செல்வதற்கு இன்னும் அனுமதி தரப்படவில்லை. அனைத்து கோயில்களிலும் வழிபாடுகளும், ஆராதனைகளும் வழக்கம் போல் நடைபெற்று வருகிறது.

திருவிழாக்கால உற்சவங்களும் நடைபெற்ற போதிலும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. மதுரையில் மீனாட்சி திருமணத்திற்கும் இதே நடைமுறையே இருந்தது. ஆன்லைன் மூலம் பக்தர்களின் தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முருகனை நேரில் தரிசிக்க முடியவில்லையே என பக்தர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்

தற்போது வைகாசி விசாகத்திற்கும் அதே நடைமுறையில் ஆன்லைன் மூலம் பக்தர்கள் தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

A1TamilNews.com

From around the web