அதிபர் ட்ரம்ப் பதவி நீக்க விவகாரம்…. பிடி இறுகிறதா?

அதிபர் ட்ரம்ப் பதவி நீக்க விவகாரம் குறித்துஅமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர் அவையில் வாக்கெடுப்பு நடத்தப் போவதாக சபாநாயகர் நான்சி பெலோசி கூறியுள்ளார். அரசியல் லாபத்திற்காக உக்ரேன் அரசிடம் தகவல்கள் , அந்நாட்டுக்கான அமெரிக்க பொருளாதார உதவியை நிறுத்தி வைத்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் விசாரணை நடந்து வருகிறது. பாராளுமன்ற புலனாய்வுக் குழுவின் தலைமையில் நடைபெறும் இந்த விசாரணையில் பல்வேறு அதிகாரிகள் சாட்சியம் அளித்து வருகிறார்கள். கோப்புகளை வழங்குவதற்கு வெள்ளை மாளிகை தரப்பில் மறுப்பு தெரிவித்து வருவதாலும், நீதிமன்ற
 

அதிபர் ட்ரம்ப் பதவி நீக்க விவகாரம்…. பிடி இறுகிறதா?திபர் ட்ரம்ப் பதவி நீக்க விவகாரம் குறித்துஅமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர் அவையில்  வாக்கெடுப்பு நடத்தப் போவதாக சபாநாயகர் நான்சி பெலோசி கூறியுள்ளார். அரசியல் லாபத்திற்காக உக்ரேன் அரசிடம் தகவல்கள் , அந்நாட்டுக்கான அமெரிக்க பொருளாதார உதவியை நிறுத்தி வைத்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் விசாரணை நடந்து வருகிறது.

பாராளுமன்ற புலனாய்வுக் குழுவின் தலைமையில் நடைபெறும் இந்த விசாரணையில் பல்வேறு அதிகாரிகள் சாட்சியம் அளித்து வருகிறார்கள். கோப்புகளை வழங்குவதற்கு வெள்ளை மாளிகை தரப்பில் மறுப்பு தெரிவித்து வருவதாலும், நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம் விசாரணையை முடக்கி வைக்க ட்ரம்ப் தரப்பு முயல்வதாலும், விசாரணைக்கான நடைமுறைகளை முடிவு செய்வதற்காக பாராளுமன்ற அவையில்  வாக்கெடுப்பு நடத்தப் போவதாக நான்சி பெலோசி அறிவித்துள்ளார்,

உறுப்பினர்கள் அவையில் ஜனநாயகக் கட்சிக்கு பெரும்பான்மை உள்ளதால் வியாழக்கிழமை வாக்கெடுப்புக்கு வரும் இந்த மசோதா நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது. அடுத்த கட்ட விசாரணையை தொலைக்காட்சி மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவதற்கும் இந்த மசோதாவில் தீர்மானங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

சாட்சியங்கள் கூறும் தகவல்களை பொதுமக்களுக்கு நேரடியாக தெரியப் படுத்தவதன் மூலம், அதிபர் ட்ரம்புக்கு அரசியல் ரீதியான பின்னடைவுகள் ஏற்படலாம் என்று கருதப்படுகிறது. 

 

From around the web