சத்தியமா விடவே கூடாது! ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் -ஐயும் விசாரிக்கனும் ரஜினி சார்!

சாத்தான்குளம் சம்பவத்தில் தொடர்புடைய இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் காவலர்களள் மீது கொலைக் குற்ற வழக்கு பதிவு கைது செய்யப் பட்டுள்ளார்கள். இந்நிலையில் போலீசாருக்கு உடந்தையாக இருந்த ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸை சார்ந்தவர்களையும் விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வருகிறது. திமுக தலைவர் இந்த கோரிக்கையை முன் வைத்திருந்தார். தற்போது பல்வேறு தரப்பினரும், தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் இதே கோரிக்கையை வலியுறுத்தி வருகிறார்கள். இந்நிலையில் தந்தை மகன் மரணத்தில் சம்மந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக
 

சத்தியமா விடவே கூடாது! ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் -ஐயும் விசாரிக்கனும் ரஜினி சார்!சாத்தான்குளம் சம்பவத்தில் தொடர்புடைய இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் காவலர்களள் மீது கொலைக் குற்ற வழக்கு பதிவு கைது செய்யப் பட்டுள்ளார்கள். இந்நிலையில் போலீசாருக்கு உடந்தையாக இருந்த ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸை சார்ந்தவர்களையும் விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வருகிறது.

திமுக தலைவர் இந்த கோரிக்கையை முன் வைத்திருந்தார். தற்போது பல்வேறு தரப்பினரும், தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் இதே கோரிக்கையை வலியுறுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் தந்தை மகன் மரணத்தில் சம்மந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தே ஆக வேண்டும். விடக் கூடாது. சத்தியமா விடக் கூடாது என்று ரஜினிகாந்த் ட்வீட் செய்து இருந்தார்.

சம்மந்தப்பட்ட அனைவருக்கும் என்று ரஜினிகாந்த் கூறியிருந்தாலும், யாரெல்லாம் அந்த சம்மந்தப்பட்டவர்கள் என்ற கேள்வியை ஒரு தரப்பினர் எழுப்பி வருகிறார்கள். மூச்சடைப்பில் உயிரிழந்தார் என்று சொன்ன முதலமைச்சர், லாக்-அப் கொலை அல்ல என்று சொன்ன அமைச்சர் கடம்பூர் ராஜு இவங்களை எல்லாம் சேர்த்து தான் சொல்கிறாரா ரஜினிகாந்த் என்றும் சிலர் கேள்வி எழுப்பினார்கள்.

சாத்தான்குளம் தந்தைமகன் மரணத்தில் ‘friends of police’ அமைப்பினரின் பங்கும் இருப்பதாக தகவல்கள் வருகின்றன. தென்மாவட்டங்களில் அந்த அமைப்பின் பிண்ணனியில் குறிப்பிட்ட இயக்கம் ஒன்று இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுகின்றது. இதையும் விசாரிக்கவேண்டும்  சத்தியமா விடவே கூடாது என்று ரஜினிகாந்தை டேக் செய்து ட்வீட் செய்துள்ளார் பத்திரிக்கையாளர் விக்ரமன்.

A1TamilNews.com

From around the web