தொழிலாளர்களை விமானத்தில் அனுப்பி வைத்தவர்! விவசாயி வடிவத்தில் வந்த கடவுள்?

நாடு முழுவதும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு நடந்தே சென்று கொண்டிருக்கும் வேளையில், தனது காளான் பண்ணையில் வேலை பார்த்து வந்த தொழிலாளர்களை விமானம் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளார் ஒரு விவசாயி. டெல்லியில் உள்ள திகிபூர் என்ற கிராமத்தில் காளான் விவசாயியான பப்பன் சிங்கின் பண்ணையில் பீகாரைச் சேர்ந்த 10 தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். ஊரடங்கு அறிவித்த முதல் வாரத்திலேயே இவர்களை தங்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க முயற்சி செய்துள்ளார் பப்பன்
 

தொழிலாளர்களை விமானத்தில் அனுப்பி வைத்தவர்! விவசாயி வடிவத்தில் வந்த கடவுள்?நாடு முழுவதும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு நடந்தே சென்று கொண்டிருக்கும் வேளையில், தனது காளான் பண்ணையில் வேலை பார்த்து வந்த தொழிலாளர்களை விமானம் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளார் ஒரு விவசாயி.

டெல்லியில் உள்ள திகிபூர் என்ற கிராமத்தில் காளான் விவசாயியான பப்பன் சிங்கின் பண்ணையில் பீகாரைச் சேர்ந்த 10 தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். ஊரடங்கு அறிவித்த முதல் வாரத்திலேயே இவர்களை தங்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க முயற்சி செய்துள்ளார் பப்பன் சிங்.

ரயில்கள் ஏதும் இயங்காததால் தொழிலாளர்களால் ஊருக்குச் செல்ல முடியாமல் போயுள்ளது. ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்ட போது அதில் தனது தொழிலாளர்கள் அனைவரையும் பாட்னாவில் உள்ள சமஸ்திபூருக்கு அனுப்பிவைக்க முயற்சித்துள்ளார். அதுவும் கைகூடவில்லை. மற்ற தொழிலாளர்களை போன்று தன்னுடைய தொழிலாளர்களையும்  ஆயிரக்கணக்கான மைல்களுக்கு நடந்தே அனுப்பி வைக்க பப்பன் சிங்கிற்கு மனம் வரவில்லை.

எனவே, விமான போக்குவரத்து தொடங்கியதும் விமான டிக்கெட் எடுத்துக் கொடுத்துள்ளார் டெல்லியில் இருந்து பீகாருக்கு செல்ல தன்னுடைய 10 தொழிலாளர்களுக்கும், மொத்த 68 ஆயிரம் ரூபாய்க்கு விமான டிக்கெட் எடுத்து கொடுத்துள்ளார் விவசாயி பப்பன்சிங். அதோடு மட்டுமல்லாமல், ஒவ்வொருவருக்கும் தலா 3 ஆயிரம் ரூபாய் வீதம் 10 தொழிலாளிகளுக்கும் கொடுத்து அனுப்பியுள்ளார்.

தொழிலாளர்களை விமான நிலையம் வரையிலும் அழைத்துச் சென்று விமானத்தில் வழி அனுப்பி வைத்து விட்டு வந்துள்ளார். இது குறித்து பேசியுள்ள லக்கிந்த என்ற தொழிலாளி, 27 வருடமாக பப்பன்சிங்கிடம் வேலை பார்த்து வருவதாகவும் விமானத்தில் பயணிப்பேன் என்று நினைத்துக் கூட பார்த்ததில்லை என்று உருக்கமாகக் கூறியுள்ளார்.

பப்பன்சிங் போன்ற முதலாளிகளும் இந்தியாவில் இருக்கிறார்கள் என்பது மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது. 

A1TamilNews.com

 

From around the web