ஐபிஎல் 2019: ஹைதராபாதை வெளியேற்றியது டெல்லி! #SRHvsDC

விசாகப்பட்டினம்: இன்னும் இரண்டே இரண்டு ஆட்டங்கள்தான். 12வது ஐபிஎல் தொடர் அத்துடன் நிறைவு பெறப் போகிறது. லீக் ஆட்டங்கள் முடிந்து, இப்போது தகுதிச் சுற்று ஆட்டங்கள் நடக்கின்றன. முதல் தகுதிச் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்திய மும்பை இந்தியன் நேரடியாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்துவிட்டது. அடுத்து வெளியேற்றுதல் சுற்று ஆட்டம் நேற்று நடந்தது. இதில் சன் ரைசர்ஸ் ஹைதராபாதும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. 12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இறுதி கட்டத்தை எட்டி விட்டது.
 

விசாகப்பட்டினம்: இன்னும் இரண்டே இரண்டு ஆட்டங்கள்தான். 12வது ஐபிஎல் தொடர் அத்துடன் நிறைவு பெறப் போகிறது.

லீக் ஆட்டங்கள் முடிந்து, இப்போது தகுதிச் சுற்று ஆட்டங்கள் நடக்கின்றன. முதல் தகுதிச் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்திய மும்பை இந்தியன் நேரடியாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்துவிட்டது. அடுத்து வெளியேற்றுதல் சுற்று ஆட்டம் நேற்று நடந்தது. இதில் சன் ரைசர்ஸ் ஹைதராபாதும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின.

12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இறுதி கட்டத்தை எட்டி விட்டது. சென்னையில் நேற்று முன்தினம் நடந்த முதலாவது தகுதி சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இந்த நிலையில் விசாகப்பட்டினத்தில் நேற்று இரவு நடந்த வெளியேற்றுதல் (எலிமினேட்டர்) சுற்று ஆட்டத்தில் புள்ளி பட்டியலில் 3-வது இடம் பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, 4-வது இடம் பெற்ற ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணியைச் சந்தித்தது.

‘டாஸ்’ ஜெயித்த டெல்லி அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விருத்திமான் சஹா, மார்ட்டின் கப்தில் ஆகியோர் களம் இறங்கினார்கள்.

தொடக்க ஆட்டக்காரர் மார்டின் கப்தில் 36 ரன்கள் அடித்தார். மணிஷ் பாண்டே 30 ரன்களும், கேப்டன் வில்லியம்சன் 28 ரன்களும், விஜய் சங்கர் 25 ரன்களும் அடித்தனர். முக்கிய வீரர்கள் இல்லாததால் ஹைதராபாத் அணியின் பேட்டிங்கில் தடுமாற்றம் தென்பட்டது. கடைசியில் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது ஹைதராபாத் அணி.

டெல்லி அணி தரப்பில் கீமோ பால் 3 விக்கெட்டும், இஷாந்த் ஷர்மா 2 விக்கெட்டும், டிரென்ட் பவுல்ட், அமித் மிஸ்ரா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பிரித்வி ஷா, ஷிகர் தவான் ஆகியோர் நல்ல தொடக்கம் ஏற்படுத்தினார்கள். 7.3 ஓவர்களில் அணியின் ஸ்கோர் 66 ரன்னாக இருந்த போது ஷிகர் தவான் (17 ரன்) வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் 8 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதனை அடுத்து ரிஷாப் பான்ட், பிரித்வி ஷாவுடன் ஜோடி சேர்ந்தார். அடித்து ஆடிய பிரித்வி ஷா 38 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரிஷப் பண்ட் அதிரடியாக ஆடி 49 ரன்கள் அடித்தார். அவரது இந்த ஆட்டம்தான் அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றது.

கடைசி ஓவரில் டெல்லி அணி வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரில் 4-வது பந்தில் அமித் மிஸ்ரா (1 ரன்) சர்ச்சைக்குரிய முறையில் ரன்-அவுட் ஆனதால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அடுத்த பந்தை கீமோ பால் பவுண்டரிக்கு விரட்டி அணியை வெற்றி பெற வைத்தார். 19.5 ஓவரில் டெல்லி அணி 8 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டி வாய்ப்பில் நீடிக்கிறது. தோல்வி கண்ட ஹைதராபாத் அணி வெளியேறியது.

நாளை 2-வது தகுதி சுற்று – சென்னை-டெல்லி அணிகள் மோதல்

ஐ.பி.எல். போட்டி தொடரில் இன்று ஓய்வு நாளாகும். விசாகப்பட்டினத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னை அணி முதலாவது தகுதி சுற்றில் மும்பையிடம் தோல்வி அடைந்தாலும் 2-வது வாய்ப்பின் மூலம் இந்த தகுதி சுற்றில் விளையாடுகிறது. வெளியேற்றுதல் சுற்றில் ஹைதராபாத் அணியை வீழ்த்தியதன் மூலம் டெல்லி அணி 2-வது தகுதி சுற்றில் விளையாட தகுதி பெற்றது. இந்த 2-வது தகுதி சுற்றில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

12-ந் தேதி இரவு 7.30 மணிக்கு ஹைதராபாத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதும்.

– வணக்கம் இந்தியா

From around the web