டெல்லி சட்டமன்றத் தேர்தல்.. 61.67 சதவீத வாக்குப் பதிவு!

70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டமன்றத்திற்கு இன்று தேர்தல் நடைபெற்றது. காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. 61.67 சதவீதம் வாக்குப் பதிவு நடந்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மாலை 5 மணி அளவில் 44.52 சதவீதமாக இருந்த நிலையில், கடைசி ஒரு மணி நேரத்தில் 10 சதவீதம் பதிவாகியுள்ளது. 13 ஆயிரத்து 571 வாக்கு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஆளும் கட்சியான ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கிடையேயான மும்முனைப் போட்டியாக
 

டெல்லி சட்டமன்றத் தேர்தல்.. 61.67 சதவீத வாக்குப் பதிவு!70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டமன்றத்திற்கு இன்று தேர்தல் நடைபெற்றது. காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. 61.67 சதவீதம் வாக்குப் பதிவு நடந்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மாலை 5 மணி அளவில் 44.52 சதவீதமாக இருந்த நிலையில், கடைசி ஒரு மணி நேரத்தில் 10 சதவீதம் பதிவாகியுள்ளது. 13 ஆயிரத்து 571 வாக்கு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஆளும் கட்சியான ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கிடையேயான மும்முனைப் போட்டியாக இந்த தேர்தல் அமைந்துள்ளது.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், முன்னாள்  குடியரசுத் துணைத் தலைவர் பிரணாப் முகர்ஜி,  முன்னாள்  குடியரசுத் துணைத் தலைவர்  ஹமீத் அன்சாரி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, மத்திய அமைச்சர்கள் ஹர்ஷ் வர்த்தன், ஜெய்சங்கர், காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, ப்ரியங்கா காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வாக்களித்தார்கள்.

வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 11ம் தேதி செவ்வாய்கிழமை நடைபெறும். ஆட்சியமைக்க 36 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். கடந்த தேர்தலில் ஆம் ஆத்மி 67 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது குறிப்பிடத் தக்கது.

2015 தேர்தலில் வாக்குப் பதிவு 67.12 சதவீதமாக இருந்தது. தற்போது 5.5 சதவீதம் அளவில் வாக்குப்பதிவு குறைந்துள்ளது. 

https://A1TamilNews.com

 

From around the web